Home சினிமா 'ஏ..பொண்டாட்டி நான் ஒன்னும் கெட்டவன் இல்லடி'..சீமானின் வீடியோக்களை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

‘ஏ..பொண்டாட்டி நான் ஒன்னும் கெட்டவன் இல்லடி’..சீமானின் வீடியோக்களை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய விஜயலட்சுமி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார்.

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

 

vijayalakshmi

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார். இவர் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்தார்.

ttn

அப்போது சீமான் தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய விஜயலட்சுமி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார்.

ttn

சமீபத்தில் தஞ்சை பெரியகோவிலில் சாமி தரிசனம் செய்த சீமான், சிவபக்தர்களான என்னையும் என் தாயையும் கிண்டல் செய்துவிட்டு, இப்போது நெற்றியில் விபூதி பட்டை பூசி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருப்பது எந்த வகையில் சரி? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் குறித்த இன்னும் சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சீமான் சட்டை அணியாமல், ‘ஏ பொண்டாட்டி நான் ஒன்னும் கெட்டவன் இல்லடி’ என்று சொல்கிறார். அதற்கு விஜயலட்சுமி அப்புறம் என்று கேட்க, கேடு கெட்டவன் என்று கூறுகிறார். அதேபோல் மற்றொரு வீடியோவில், ‘பொண்டாட்டி மாமாவ நீ நல்லவன்னு நெனைக்காத, என்று சொல்ல அதற்கு விஜயலட்சுமி, என்ன மாமா இப்படியெல்லாம் சொல்லுறீங்க என்று கேட்க, ரொம்ப நல்லவன் என்கிறார்.  

இதை கண்ட சிலர், அட நீங்க வேற, சினிமா ரிகர்சல் னு சொல்லிடுவான் என்று சீமானை வறுத்தெடுத்தும், இன்னும் சிலரோ, வேற ஏதாவது புதிதாக சீமானை பத்தி தவறாக போட்டு அரசியல் செய்யுங்கள் என்று சீமானுக்கு ஆதரவாகவும் கூறிவருகிறார்கள். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.

ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

அரசியலிலிருந்து சசிகலா பின்வாங்கி இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக ஒற்றைக் காலில் நிற்கிறார். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்; இல்லையேல் தனித்துப் போட்டியிடுவோம் என்ற...
TopTamilNews