Home இந்தியா ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5000 கோடிக்கும் மேல் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய சட்டவிரோதமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் முதலீடு செய்வதற்கான எப்ஐபிபி ஒப்புதல் பெறுவதற்காக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்துள்ளதாகவும், இதன் மூலம் அந்நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நவம்பர் 26-ம் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை தலைவர் கர்னல் சிங் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

அரியலூர் அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தமிழக...

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது...

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில்...

“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடுன கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்!

அதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த...
TopTamilNews