ஏஆர் ரஹ்மானை மிஞ்சும் மகன் அமீன்… பாராட்டி நெகிழும் திரையுலகம்!

இளையராஜாவின் இசையைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா நடனங்களின் மீது மோகம் ஏற்படத் துவங்கிய 90 களில் தனது அதிரடி இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு புது வெளிச்சம் பாய்ச்சினார் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே பாலிவுட் வரை திரும்பி பார்க்க வைத்த ரஹ்மானுக்கு அதன் பிறகு ஏறுமுகம் தான்.

இளையராஜாவின் இசையைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா நடனங்களின் மீது மோகம் ஏற்படத் துவங்கிய 90 களில் தனது அதிரடி இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு புது வெளிச்சம் பாய்ச்சினார் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே பாலிவுட் வரை திரும்பி பார்க்க வைத்த ரஹ்மானுக்கு அதன் பிறகு ஏறுமுகம் தான். இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதுகளை ஏந்தி நின்றாலும் இவரது பணிவு இன்று வரையில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லோராலும் புகழப்படுகிறது.
 

ar rahman

இசைத்துறையில் தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்து வரும் ஏஆர் ரஹ்மான், லேட்டஸ்டாக தனது மகன் அமீனுடன் சேர்ந்து இசையமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோவின் ஆரம்பத்தில் மகன் அமீனுக்கு இசையமைக்க பயிற்சி அளிக்கும் ரஹ்மான், பின்னர் இசையமைக்கிறார். தந்தையின் இசைக்கு ஈடு கொடுக்கும் விதமாக ட்ரம் பீட்களுடன் அமீன் ரிதம் வாசிக்கிறார். சுமார் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் தந்தையும், மகனும் இணைந்து புதுவிதமான இசையில் ராஜாங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ரஹ்மான் மகனின் குரல், இப்போது தந்தையுடன் இணைந்து இசையமைக்கவும் தயாரானதைப் பார்த்து திரையுலகினர் ரஹ்மானிடம் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

லாக்டவுனால் முடங்கி கிடந்த வாகன விற்பனை தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுத்தமாக வாகன விற்பனை நடக்கவில்லை. மே மாதத்தில் வாகன விற்பனை சிறிது நடைபெற்றது. ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!