Home அரசியல் எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க, எச்.ராஜா ஜோக் சொல்லிருக்காப்டி!

எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க, எச்.ராஜா ஜோக் சொல்லிருக்காப்டி!

ப.சிதம்பரம் ஐந்து விரல்களை காட்டி 5% என்று சொல்லி சிரித்துச் சென்றதை, தனக்கேற்றபடி ஒரு விளக்கவுரையை ட்விட்டரில் எழுதியிருக்கிறார் எச்.ராஜா. என்னவென்று? ”5 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளேன் என்கிறாரா? அல்லது 50 தலைமுறைக்கு என்கிறாரா?” என கேட்டுள்ளார்.

எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க, எச்.ராஜா ஜோக் சொல்லிருக்காப்டி!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, சிபிஐ அதிகாரிகள் புடைசூழ வெளியேவந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்கொண்ட செய்தியாளர் ஒருவர், ’தங்களின் வழக்கு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என ஒரு அவசர கேள்வியை வீசினார். செய்தியாளரின் முகத்துக்கு அருகேவந்த ப.சிதம்பரம் சிரித்துக்கொண்டே ‘5%’ என ஐந்து விரல்களை விரித்துச் சொன்னார். மத்திய அரசு தகவல்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் ஜிடிபி 5%மாக குறைந்திருப்பதை நக்கலடிக்கும் விதமாக இவ்வாறு ப.சி. சொன்னது மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு எதிர்வினையாற்ற வேண்டுமே, வழக்கம்போல எச்.ராஜா எதிர்வினையாற்றியிருக்கிறார்.

Is this warning to govt for releasing actual data?

ப.சிதம்பரம் ஐந்து விரல்களை காட்டி 5% என்று சொல்லி சிரித்துச் சென்றதை, தனக்கேற்றபடி ஒரு விளக்கவுரையை ட்விட்டரில் எழுதியிருக்கிறார் எச்.ராஜா. என்னவென்று? ”5 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளேன் என்கிறாரா? அல்லது 50 தலைமுறைக்கு என்கிறாரா?” என கேட்டுள்ளார். சிபிஐ கஸ்டடியில் இருந்தபோது, என்ன கைய புடிச்சு இழுத்தியா காமெடி மாதிரி பதில் சொல்லி, சிபிஐ அதிகாரிகளை சுத்தலில்விட்டு, இந்தாளுகிட்டேர்ந்து எங்களை எப்படியாச்சும் காப்பாத்துங்க யுவரானர்னு கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகளே கெஞ்சுமளவுக்கு போக்கு காட்டிய சிதம்பரமா, பத்ரிகையாளரிடம் இவ்வாறு பேசப்போகிறார்? 

5% என்ற ப.சிதம்பரத்தின் பொருளாதாரம் குறித்த கிண்டலுக்கு முறையான பதிலடியை எச்.ராஜா தந்திருந்தால் அவருக்கு கவுரவமாக இருந்திருக்கும். என்ன செய்வது? கவுரவமான பதிலடி தரும்வகையில் பொருளாதாரம் இல்லை. இந்த எழவுக்குத்தாண்டா எந்த டேட்டாவையும் ரிலீஸ் பண்ணாதீங்கன்னு தலைதலையா அடிட்டுக்கிட்டேன் என தன் கட்சி சீனியர்களிடம் வேண்டுமானால் எச்.ராஜா மோதியிருக்கக்கூடும்.

எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க, எச்.ராஜா ஜோக் சொல்லிருக்காப்டி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சாலையில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார் – ஷாக்கிங் வீடியோ!

குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலுள்ள காட்கோபர் என்ற இடத்தில்...

மசினகுடியில் தென்பட்ட அரிய வகை கழுதை புலி உயிரிழப்பு!

நீலகிரி நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் தென்பட்ட அரிய வகை கழுதைப்புலி இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை...

“இது நியாயமல்ல; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடார்பாக...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

முதல்வர் அறிவிக்கும் போது பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,...
- Advertisment -
TopTamilNews