Home சினிமா ‘எரும சாணி’ விஜய் இயக்கும் படத்திற்காக 7 கிலோ உடலைக் குறைத்த அருள்நிதி

‘எரும சாணி’ விஜய் இயக்கும் படத்திற்காக 7 கிலோ உடலைக் குறைத்த அருள்நிதி

இது முழுக்க கல்லூரியை களமாக கொண்ட உண்மைக் கதை. அருள்நிதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் தனது கதாபாத்திரத்திற்காக உடலை ஏழு கிலோ வரை குறைத்துவிட்டார். அவர் ஷூட்டிங்கிற்கு வந்த அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.” என்று கூறினார்.

 

தமிழ் சினிமாவில் வித்தியசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயர் பெற்றவர் அருள்நிதி. இவர் தற்போது எரும சாணி என்ற யூட்யூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

arulnithi-09

இது பற்றிப் பேசிய விஜய் “இது முழுக்க கல்லூரியை களமாக கொண்ட உண்மைக் கதை. அருள்நிதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் தனது கதாபாத்திரத்திற்காக உடலை ஏழு கிலோ வரை குறைத்துவிட்டார். அவர் ஷூட்டிங்கிற்கு வந்த அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.” என்று கூறினார்.

படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் அருள்நிதியின் நண்பனாக நடிக்கவும் இருக்கிறார் விஜய். மேலும் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

vijay-es

இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங்க் பேசிய போது, “டிமான்டி காலனி படத்திலிருந்தே இருவரும் பழகி வருகிறோம். நட்பே துணை படப்பிடிப்பில் விஜயை சந்தித்தேன். அவர் என்னிடம் இந்த  கதையின் ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். நான் இந்த கதைக்கு அருள்நிதியை சிபாரிசு செய்தேன், அதுபோலவே அவருக்கும் கதை பிடித்துவிட்டது, பின்னர் படக்குழுவை முடிவு செய்தோம்” என்றும் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

கோவையில் பொதுமக்களிடையே காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

உடல்நிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான்; அரசியல் நிலைப்பாட்டை கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்த நிலையில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்டாகிவருகிறது.

கடலூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், செல்போன் திருடிய நபர் கைது

கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; பாஜகவினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்- திருமாவளவன்

சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டுமென திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன்...
Do NOT follow this link or you will be banned from the site!