எம்.பி.யான கருணாஸ் பட நாயகி: பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு!?

மக்களவை தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகையும் எம்.பி.யுமான நவ்நீத் கவுர் பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

மும்பை:  மக்களவை தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகையும் எம்.பி.யுமான நவ்நீத் கவுர் பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

naveet

நடிகை நவ்நீத் கவுர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை நவ்நீத் திருமணம் செய்துகொண்டார்.

naveet

இவர்களின் திருமணத்திற்குப் பிறகு ரவி ராணா  யுவா ஸ்வாபிமான் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியானது நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்  நவ்நீத் கவுர்  அமராவதி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா கட்சியின் வேட்பாளர்  ஆனந்த்ராவ்வை காட்டிலும் 36,951 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று  எம்பியாக தேர்வாகியுள்ளார். 

naveet

இந்நிலையில்  பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நவ்நீத் கவுர் மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் இதுவரை அரசியலில் கணவருக்கு உதவியாக இருந்தேன். தற்போது நானும் அரசியலில் தீவிரமாக பணியாற்றவுள்ளேன். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் பலர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.  அவர்கள் புதிய பார்வையுடன் செயல்படுவார்கள்’ என்றார். 

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...