எப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’…ஒரு படுபயங்கர சீக்ரெட் மேட்டர்…

இன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியாக இருந்து விட்டு 28ம் தேதி மறுபடியும் ‘தர்பார்’ படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியாக இருந்து விட்டு 28ம் தேதி மறுபடியும் ‘தர்பார்’ படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

rajinikanth

கடந்த 15ம் தேதி மும்பை ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து 15 நாட்கள்  அரசியல் ஓய்வு எடுத்துவந்த ரஜினி, தேர்தல் முடிவுகளுக்குப்பின் கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக தனது போயஸ் இல்லத்தில் பல முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து ஆலோசனைகள் நடத்திவந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் ரஜினியை சந்தோஷப்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து எடப்பாடி பதவியை இழப்பார். அதை ஒட்டி தனது அரசியல் பிரவேசம் இருக்கவேண்டும் என்பது ரஜினியின் விருப்பம்.

ஆனால் ஆட்சியைத் தொடர்வதன் மூலம் அதிமுகவும், பாராளுமன்றத் தேர்தலில் சக்கப்போடு போட்டதன் மூலம் திமுகவும் தமிழகத்தில் எங்களைத் தாண்டி மூன்றாவது சக்திக்கு இப்போதைக்கு இடம் இல்லை என்று நிரூபித்துவிட்டன. இப்படி ஒரு டபுள் கிளைமாக்ஸை ரஜினி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் கமல் குழப்பமில்லாத மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார் என்று ரஜினி எதிர்பார்த்தார். அவர் ஒரு குறிப்பிட்ட சில தொகுதிகள் தவிர்த்து எதையும் சாதிக்கவில்லை.

rajini and modi

 

ஸோ ரஜினிக்கு இப்போதைக்கு அரசியல் எண்ட்ரி ஐடியா சுத்தமாக இல்லை. மோடிஜிக்கு முதல் வாழ்த்து. அடுத்ததாக,…பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’என்கிற இரண்டாவது வாழ்த்தோடு, இன்னும் 4 தினங்களில் மும்பைக்கு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பத்தயாராகிவிட்டார் ரஜினி.

darbar

‘எப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’ இது ‘தர்பார்’ படப்பிடிப்பு தொடங்குவதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்ட கேள்விக்கு ரஜினி சொன்ன பதில். மத்தபடி கன்ஃபியூஸ் ஆகிக்காதீங்க மக்களே.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....