Home சினிமா எப்பவுமே மாஸ்.. தலைவருக்கு மட்டும் மரண மாஸ்: ‘பேட்ட’ பாடலை அவுட்டாக்கிய தமிழ் ராக்கர்ஸ்

எப்பவுமே மாஸ்.. தலைவருக்கு மட்டும் மரண மாஸ்: ‘பேட்ட’ பாடலை அவுட்டாக்கிய தமிழ் ராக்கர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடலை படக்குழுவிற்கு முன்பாகவே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

எப்பவுமே மாஸ்.. தலைவருக்கு மட்டும் மரண மாஸ்: ‘பேட்ட’ பாடலை அவுட்டாக்கிய தமிழ் ராக்கர்ஸ்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடலை படக்குழுவிற்கு முன்பாகவே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களை மட்டுமே ரிலீசான அன்றே வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், தற்போது முதல் சிங்கிள் டிராக்கை லீக் செய்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எதுவும் பலனளிக்கவில்லை. 

தற்போது ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் பாடல் லீக்காகி இருப்பது படக்குழு மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எப்பவுமே மாஸ்.. தலைவருக்கு மட்டும் மரண மாஸ்: ‘பேட்ட’ பாடலை அவுட்டாக்கிய தமிழ் ராக்கர்ஸ்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews