Home சினிமா எப்படி வேணுமானாலும் ஜெயிக்கலாமா? : வனிதாவை மறைமுகமாக தாக்கும் கமல்!

எப்படி வேணுமானாலும் ஜெயிக்கலாமா? : வனிதாவை மறைமுகமாக தாக்கும் கமல்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் முதல்  புரொமோ தற்போது  வெளியாகியுள்ளது. 

எப்படி வேணுமானாலும் ஜெயிக்கலாமா?  : வனிதாவை மறைமுகமாக தாக்கும் கமல்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் முதல்  புரொமோ தற்போது  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 76-வது நாளான இன்று 8 பேட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வனிதா வைல்ட்காட் போட்டியாளராக மீண்டும் உள்ளே வந்தார். அவரை  தொடர்ந்து புது வரவாக வெளியில் சென்ற சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மீண்டும் உள்ளே நுழைந்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ ஒன்றி வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன், ‘ஆர்வம் குறைஞ்சிடுச்சிங்க, சலிப்பா இருக்குங்க, தியாகத்துக்கு ரெடி அப்படிலாம் சொன்னவங்க, ரொம்ப தீவிரமா விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி அப்படிங்குறது ஒருமுறை; இப்படி தான் வெல்வேன் என்று லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் இரண்டாவது தான் சிறந்தது என்பதை எடுத்து சொல்லும் நேரம் இன்று’ என்று கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள சாக்ஷி லாஸ்லியா- கவின் இருவரையும் டார்கெட் செய்வது போலவே இருக்கிறது. அதில் நேற்று உச்சக்கட்டமாக அடித்துக் கொள்ளாத குறையாக சாக்ஷியும்  லாஸ்லியாவும் நேற்று  முட்டி கொண்டனர். ஷெரினை வனிதா விமர்சித்து வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல் இதுகுறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படி வேணுமானாலும் ஜெயிக்கலாமா?  : வனிதாவை மறைமுகமாக தாக்கும் கமல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews