Home க்ரைம் 'என் பொண்டாட்டி கிட்ட உனக்கு என்னடா பேச்சு' பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற கணவர்!

‘என் பொண்டாட்டி கிட்ட உனக்கு என்னடா பேச்சு’ பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற கணவர்!

மனைவியிடம் பேசி கொண்டிருந்தவரைக் கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது. 

மனைவியிடம் பேசி கொண்டிருந்தவரைக் கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது. 

ttn

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வருபவர் கொளஞ்சி. இந்நிலையில்  நேற்று ரவி கொளஞ்சியின்  மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொளஞ்சி என் மனைவியிடம் உனக்கு என்ன பேச்சு? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.  இவர்களின் சண்டை கைகலப்பாக மாற, கொளஞ்சியின் குடும்பத்தினர் ரவியை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து ரவி மேல்சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். 

ttn

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொளஞ்சி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்குகளுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை....

துபாய் இறகுகள்… ராஜஸ்தான் கற்கள்… ஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்?

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...

‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!