Home சினிமா என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

தனது குடும்பம் மற்றும் அவர்களுடனான பிரச்னை குறித்து அவர் கூறிய பலவிஷயங்கள் ஒளிபரப்பாகவில்லை

என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

அம்மா அப்பாவுக்காக தன்  காதலை தியாகம் செய்ததாக பிக் பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள்  தங்களின் தனிப்பட்ட விஷயங்களை  பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, அபிராமி உள்பட பலரும் தங்கள்  சோகக்கதையை கூறி கண்ணீர்  வடித்த  நிலையில் நேற்று  வனிதா தனது சோகக்கதையை கூறினார்.

vanitha

அதில், நீங்கள் வெளியில் சொல்லாத ரகசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில், ‘நான் தைரியமான பொண்ணு இல்ல. இப்போ இருக்குற தைரியம் எனக்கு ஏன்  அப்போ வரலைன்னு தெரியல. நான் அப்படி இருந்து இருந்தா நான் விரும்புன லைஃப்  எனக்கு இப்போ கெடைச்சி இருக்கும். நான் ஒருத்தர விரும்புன. என் அம்மா, அப்பா அதை ஏத்துக்கல. லவ் வேணான்னு ரொம்ப கலாட்டா பண்ணாங்க. என்னால அவங்கள மீறி போக முடியல. அதனால என் வாழ்க்கையை  நான் தியாகம் பண்ணிட்டேன். நான் விரும்புன வாழ்க்கை  எனக்கு கிடைக்காமலே போயிடுச்சு. ரொம்ப பொத்தி பொத்தி வளர்த்தாங்க. அதனால கல்யாணம் பண்ணா சுதந்திரமா இருக்கலாம்ன்னு  நெனைச்சி கல்யாணம் பண்ணேன். அதுவும் சரியா இல்ல’ என்றார்.மேலும் தன் வாழ்நாளில் மறக்க முடியதாத நாள் தனது அம்மா இறந்த நாள் என்று கூறி கண்ணீர்  விட்டு அழுதார் வனிதா விஜயகுமார்.

vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  சில விஷயங்களே நேரம் கருதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் தனது குடும்பம் மற்றும் அவர்களுடனான பிரச்னை குறித்து அவர் கூறிய பலவிஷயங்கள் ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews