Home தமிழகம் 'என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்'.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !

‘என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !

காவல்நிலையத்தில் வைத்திருந்த தனது  இரும்புப் பெட்டியைக் காணவில்லை என்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

'என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்'.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !

சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் முத்துசாமி. இவர் காவல்நிலையத்தில் வைத்திருந்த தனது  இரும்புப் பெட்டியைக் காணவில்லை என்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ttn

அந்த புகாரில், ” நான் பூக்கடை காவல் நிலையம் போக்குவரத்து பிரிவில் பணிபுரிகிறேன். காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் எனது இரும்புப் பெட்டி ஒன்றைக் கடந்த 8 மாதங்களாக வைத்திருந்தேன். சென்ற வாரம் நிலையத்துக்கு வந்து ஓய்வு அறை சென்று பார்த்தபோது அந்த பெட்டி இருந்தது. ஆனால் இப்போது காவல் நிலையம் வந்து ஓய்வு அறைக்குச் சென்று பார்த்தபோது எனது பெரிய இரும்புப் பெட்டியைக் காணவில்லை. 

ttn

ஓய்வு அறையிலிருந்த எனது இரும்புப் பெட்டியை எடுத்தவர்களைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து எனது இரும்புப் பெட்டியைப் பெற்றுத் தருமாறும் கணம் ஆய்வாளர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார். இந்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

'என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்'.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும்  தேங்காய் - இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு...

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

எண்ணூரில் கடலில் நண்பருடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன்...

கிழவர்களுக்கும் இளமையை அள்ளிகொடுத்து ,துள்ளி விளையாட செய்யும்  இந்த கிழங்கு

மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள...

கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,061 கோடி ஈட்டியுள்ளது. பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது...
- Advertisment -
TopTamilNews