‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலுக்கு அரசு பேருந்தை மறித்து டிக் டோக் செய்த இளைஞர்! கும்மி எடுத்த போலீஸ்!

சிலர் செல்லும் இடமெல்லாம் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு லைக்ஸுக்காக காத்து கிடக்கின்றனர்

டிக் டோக்  மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சிலர் செல்லும் இடமெல்லாம் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு லைக்ஸுக்காக காத்து கிடக்கின்றனர்.

cudd

அந்த வகையில் கடலூர் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த  அஜீத்குமார் என்பவர்  கடந்த சில தினங்களுக்கு முன் பைக்கில் வேகமாக சென்று அரசுப் பேருந்தை வழிமறித்துள்ளார். அத்துடன் பைக்கின் மீது படுத்து கொண்டு ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ‘ என்று பாடலுக்கு  டிக்  டோக்  செய்துள்ளார்.

ttn

இந்த வீடியோவானது  வைரலான நிலையில் இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதை பார்த்து மற்ற இளைஞர்களும் செய்து விட கூடாது என்று நினைத்து அப்பகுதியில் சுற்றி திறந்த அஜித்குமாரை போலீசார் அவரது வாகனத்துடன் வளைத்து பிடித்தனர்.

ttn

இதையடுத்து, அஜீத்குமார் மீது இரண்டு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ஏற்கனவே  ஒருமுறை பச்சிளம் குழந்தையை படுக்கவைத்து அதன் தலைக்கு மேலே  கயிற்றில் தொங்கியபடி  டிக் டாக் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் அஜித்குமார். 

 

Most Popular

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில...