என்னிடம் பணம் வாங்குவதிலெல்லாம் மத்திய அரசுக்கு நோக்கம் இல்லை: அதிரடி காட்டும் விஜய் மல்லையா

என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என விஜய் மல்லையா கூறியுள்ளார்.

லண்டன்: என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி  தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவளித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் மல்லையாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் மல்லையா, இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து  வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.

நான் 2016-லேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்றார்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...