Home அரசியல் என்னது சென்னையில குடிநீர் தட்டுப்பாடா? யாரோ வதந்திய கெளப்பிவிட்டுருக்காங்க; அதிமுக அமைச்சர் பேட்டி!

என்னது சென்னையில குடிநீர் தட்டுப்பாடா? யாரோ வதந்திய கெளப்பிவிட்டுருக்காங்க; அதிமுக அமைச்சர் பேட்டி!

சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

water

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கி உள்ளது. பள்ளிகள். அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இதே பிரச்னை தான் பின் தொடர்கிறது. பெரும்பாலான ஐடி நிறுவனங்களில்  வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லும் அளவுக்கு நிலைமை வழக்கத்தை விட மோசமாகியுள்ளது. தண்ணீரால் சில இடங்களில் கொலை சம்பவமும் நடந்தேறியுள்ளது. இருப்பினும் சென்னை குடிநீர் வாரியம் தங்களால் இயன்ற அளவுக்குக் குடிநீரை வழங்கி வருகிறது.

velumani

இந்நிலையில்  இதுகுறித்து குடிநீர் தட்டுப்பாடு குறித்துப் பேசியுள்ள அமைச்சர் வேலுமணி ,’ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்கப் பாக்குமட்டை தட்டுகளைப் பயன்படுத்த கூறியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன. சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இது உண்மையில்லை. மழை பெய்யாதது இயற்கையானது. எதிர்கட்சிகளை விட நாங்கள் சிறப்பாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைக்கு வழங்கவுள்ளோம்’ என்று அறிவித்தார். 

Most Popular

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோர், மாணவர்களிடம் நாளை கருத்து கேட்பு நடைபெறுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்...

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் என்று சொன்னாலே வெற்றி, தோல்வி என்பதை தாண்டி பல...
Do NOT follow this link or you will be banned from the site!