Home தமிழகம் எனது பிள்ளை வீடு திரும்புவானா? பேரறிவாளன் தாய் உருக்கம்!

எனது பிள்ளை வீடு திரும்புவானா? பேரறிவாளன் தாய் உருக்கம்!

காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி தனது மகன் விடுதலை ஆவானா? என்று  பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். 

காந்தியடிகளின்  150வது  பிறந்தநாள் இன்று நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகக் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

gandhi

அதேபோல் டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.  அதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும்   மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

இந்நிலையில் மகாத்மாவின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ என்று பதிவிட்டுள்ளார். 

arputhammal

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக  மாநில அரசு  அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்க அனுமதி!

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி...

‘விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி’ அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் திறக்காததால், நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமமுக...

“தமிழக ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு” – பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்கு பெற வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்...

‘அதிமுக ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது’ – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும் முறைகேடான டெண்டர்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்ட அரசு...
Do NOT follow this link or you will be banned from the site!