எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி: நடிகர் பவன் கல்யாண் நெகிழ்ச்சி!

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உடனடி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

 

ttn

இதையடுத்து  நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம பேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார் 99 மீனவர்கள் வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். என்றும் அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுத்து டிவிட்டரில் முதல்வர் பழனிசாமியை டேக் செய்திருந்தார்.  பவன் கல்யாண் கோரிகையை ஏற்று தமிழக முதல்வர் பழனிசாமி, ‘இது குறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம்’ என்று கூறி உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். 

 

பவன் கல்யாண்
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “நான் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரைக்குச் 99 மீனவர்கள் கொரோனா  வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உடனடி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ttn

முதல்வர் தனது அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவின் பேரில் அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு பொருட்கள் அளித்து உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது  எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த உடனடி மீட்பு பணியில் களம் இறங்கியது அறியும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது , மற்றும் எனது ஜனசேனா தொண்டர்கள் தகுந்த நேரத்தில் இந்த மீனவர்களை காப்பாற்ற போராடும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வேண்டியதும் அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதும் மிகவும் பாராட்டத்தக்கது'” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...