Home சினிமா எனக்கு திருமணமாகிடுச்சி; என் கணவர் ஒரு சைக்கோ: கதறி அழுத மீரா மிதுன்

எனக்கு திருமணமாகிடுச்சி; என் கணவர் ஒரு சைக்கோ: கதறி அழுத மீரா மிதுன்

அவர் ஒரு சைக்கோ. திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே அவர் என்னை விட்டு சென்றுவிட்டார்.

எனக்கு திருமணமாகிடுச்சி; என் கணவர் ஒரு சைக்கோ: கதறி அழுத மீரா மிதுன்

சென்னை:  எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. என் கணவர் ஒரு சைக்கோ என்று பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

meera

பிக்பாஸ் சீசன் 3 சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பரிட்சயமான பல போட்டியாளர்களுக்கு மத்தியில்  16 ஆவது போட்டியாளராக மாடல் மீரா மிதுன்  பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக வந்தார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக அழகி  போட்டி நடத்துவதாகக் கூறி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட  மிஸ் சௌத் இந்தியா என்ற பட்டம் பறிக்கப்பட்டது. மேலும் தனக்கு சிலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் மீரா மிதுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்த திட்டமிட்டுள்ளது பிக் பாஸ் குழு.

meera

இந்நிலையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்கள் சோக கதையை கூறி வர  மீரா மிதுனின் சோக கதை மட்டும் ஒளிபரப்பாகவில்லை. ஆனால்  உண்மையில் மீராவும் தனது கதையை கூறியுள்ளார். அதில்,  ‘5 வருடத்திற்கு முன்பு   என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர் ஒரு சைக்கோ. திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே அவர் என்னை விட்டு சென்றுவிட்டார். என் அப்பா என்னை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். அந்த திருமணம் பதிவு செய்யப்படாததால் எனக்கு அப்பா வேறு திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். நான் வேண்டாம் அவருக்காக காத்திருக்கிறேன் என்றேன். ஒருமுறை என் பிறந்தநாளன்று அவரை நானே சந்தித்து பேசினேன். ஆனால்  அவர் என்னை அடித்து விட்டார். என் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. நான் உடனே வீட்டிற்கு வந்துவிட்டேன். என் திருமணம் பற்றிய நிறைய கனவுகள் இருந்தது. ஆனால்  இப்படி ஆகிவிட்டது’ என்று கதறி அழுதார் மீரா மிதுன். மீராவின் கதையை கேட்ட வனிதா விஜயகுமார் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. 

எனக்கு திருமணமாகிடுச்சி; என் கணவர் ஒரு சைக்கோ: கதறி அழுத மீரா மிதுன்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை சின்னாபின்னாமாக்கியது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை எட்டியது. உயிரிழப்பும் நான்காயிரத்தைத் தாண்டிச் சென்றது. அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தைக்...

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது....

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன் முழு ஊரடங்கு அமலில்...

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...
- Advertisment -
TopTamilNews