Home அரசியல் எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை

எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை

எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர்: எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.

பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.

அப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன? அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

சிந்தாமணியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மட்டன் பிரியாணியின் பூழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட...

தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அம்மாநிலத்திற்கு முதல்வராக ஆசைப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு...

சட்டமன்ற தேர்தல்: அதிரடியாக செயல்படும் 112 குழுக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்ந்து சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
TopTamilNews