Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது

எந்த ராசிக்காரர்களெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது

கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும்

30.03.2020 (திங்கட்கிழமை)
நல்ல நேரம் 
காலை 6 மணி முதல் 7 வரை
மாலை 4.45 மணி முதல்  5.45 வரை
ராகு காலம் 
காலை 7.30 மணி முதல்  9 வரை
எமகண்டம் 
காலை 10.30 மணி முதல்  12 வரை
 

மேஷம்
நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நல குறைபாடு சரியாகும். வங்கி பரிவர்த்தனைகளை மிக கவனமாக கையாள வேண்டும். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். 
அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம் 
இன்றைய தினம் உங்களுக்கு திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று வானம் மிக பிரகாசமாக தெரியும், பூக்கள் மேலும் வண்ணமயமாக தெரியும், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் பளபளப்பாக தோன்றும்.உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 4
மிதுனம் 
உங்கள் நிதி நிலைமை மேம்படும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. நீண்ட கால பலன்கள் தரும் பிராஜெக்ட்களில் வேலை செய்யுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
கடகம் 
குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தவிர்த்து விட முடியாது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். அலுவலகத்தில், இன்று நீங்கள் கூறுவதை அனைவரும் மிக நல்ல முறையில் கேட்பார்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 6
சிம்மம் 
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அலுவலக வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால், உங்கள் துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம்.  பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 4
கன்னி 
சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 2
துலாம் 
இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால், அவர்களைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை  பாதிக்க அனுமதிக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5
விருச்சிகம் 
பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அது உங்களுக்கு நல்லதை செய்யும். வேலையாட்களுடனும், சகாக்களுடனும், சக தொழிலாளர்களுடனும் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது.
அதிர்ஷ்ட எண்: 7
தனுசு 
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு வீட்டு வேலையை முடிக்க உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம். 
அதிர்ஷ்ட எண்: 4
மகரம் 
உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது. பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். 
அதிர்ஷ்ட எண்: 4
கும்பம் 
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
மீனம் 
தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். குடும்ப விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்கள் திட்டங்களுக்கு எதிர்பார்த்தபடி ஆதரவைப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews