Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களெல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம்!

எந்த ராசிக்காரர்களெல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம்!

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும்

28-03-2020 சனிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45  மணி முதல்
இராகு காலம் 
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம் 
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை

மேஷம் 
சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும். உங்கள் ராசிக்கான கிரக நிலைகளின் படி நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டிய நேரம் இது. இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படலாம். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
ரிஷபம் 
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும். தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். திடீரென கிடைக்கும் பண வரவு செலவுகளை சமாளிக்கும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 9
மிதுனம் 
உங்கள் ராசிக்கான கிரகங்களின் படி உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். நீங்கள் தவறு என்று எடைப்போட்ட நபர் உண்மையில் சரியானவராக இருப்பார். காலம் அதை நிச்சயமாக உங்களுக்கு உணர்த்த செய்யும். இதனால் பின்னர் வருத்தப்படக் கூடிய சூழல் உருவாகும். 
அதிர்ஷ்ட எண்: 7
கடகம் 
பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து உங்கள் வாழ்வை பிரகாசமாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2
சிம்மம் 
உடல் வலிகள் தொடர்பான பிரச்சினைகளும் வரக்கூடும். எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இன்றைய நாள் இருக்கும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். 
அதிர்ஷ்ட எண்: 9
கன்னி 
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7
துலாம் 
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும்.  அதே சமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். புதியதாக முதலீடு செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத் தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1
விருச்சிகம் 
நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். 
அதிர்ஷ்ட எண்: 3
தனுசு 
குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சந்தோஷமாக இன்றைய நாளை செலவிடுங்கள்!
அதிர்ஷ்ட எண்: 9
மகரம் 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது, முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் இன்றைய நாள் உங்களுக்கு பலன் தரக் கூடிய நாளாகவே அமையும். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9
கும்பம் 
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
மீனம் 
பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான வழி. இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாளாகவும் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews