Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று திடீர் பணவரவு உண்டாகும்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று திடீர் பணவரவு உண்டாகும்!

உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

இன்றைய ராசிபலன் 

12-05-2020, செவ்வாய்க்கிழமை,
இராகு காலம் மதியம் 03.00-04.30, 
எம கண்டம் காலை 09.00-10.30, 

மேஷம் 
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பணியிடத்தில்  தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்லுங்கள் . மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்
வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மிதுனம்
மனமகிழ்ச்சி தரும்.  வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில்  அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

சிம்மம்
பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்

கன்னி 
உறவினர்களின் திடீர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குழந்தைகளின்  படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள் 

துலாம்
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.  வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

தனுசு
வீண் செலவுகள் ஏற்படும் நாள். உங்கள் பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதில் இழுபறி ஏற்படும்.  வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். 

மகரம்
சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. 

கும்பம்
உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண தடைகள் விலகும். வியாபாரத்தில்  நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் வேலைபளு குறையும்.

மீனம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சக பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு பொருட்கள் வாங்கும் அனுகூலம் கிட்டும். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன்...

நிவர் புயல் எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் அதிகரிப்பு

சென்னை நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அலைகள் அதிகரித்து காணப்பட்டது.

காற்று பலமாக வீசியதால் இந்தியாவில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்!

நிவர் புயல் குறித்த அப்டேட் செய்திகள் வந்துகொண்டே உள்ளன. நாளை இப்புயல் காரைக்கல் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கும் என தெரிகிறது. இதனால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு...

நிவர் புயல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ரத்து!

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவான...
Do NOT follow this link or you will be banned from the site!