Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பொறுமை மிக அவசியம்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பொறுமை மிக அவசியம்!

கந்தனை வழிபடுவது கைகொடுக்கும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். 

இன்றைய ராசிபலன்
23.04.2020 வியாழக்கிழமை
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல் 7.30 வரை
சந்திராஷ்டமம் –  விசாகம், அனுஷம்
பரிகாரம் –  தைலம்
மேஷம்
பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் பொறுமையை கையாள வேண்டிய நேரம் இது. இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம். கந்தனை வழிபடுவது கைகொடுக்கும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். 
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷபம் 
மன ஆரோக்கியம் தான் இப்போதைய உங்களது தேவை. மனம் தான் வாழ்வின் நுழைவாயில். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் 
உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நேரம் இது. அது உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை உணர வேண்டும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். 
அதிர்ஷ்ட எண்: 4
கடகம் 
போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். 
அதிர்ஷ்ட எண்: 8
சிம்மம் 
வீட்டில் ஏற்படும் டென்சனால் கோபம் வரும். அதை அடக்கி வைப்பது உடலில் கோளாறை ஏற்படுத்தும். எரிச்சலான சூழ்நிலையைவிட்டு வெளியேறுவது நல்லது. மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள். வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்து விடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி 
நல்ல பலன்களைப் பெறுவதற்கு முதியவர்கள் தங்கள் கூடுதல் சக்தியை பாசிடிவாக பயன்படுத்த வேண்டும். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கி விடாமல் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள் தான் மையமானவராக இருப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4
துலாம் 
உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் 
ஆரோக்கியம் மேம்படும்.  உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும். அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். 
அதிர்ஷ்ட எண்: 9
தனுசு 
எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. 
அதிர்ஷ்ட எண்: 6
மகரம் 
உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். 
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் 
இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். 
அதிர்ஷ்ட எண்: 3
மீனம் 
முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம். அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். 
அதிர்ஷ்ட எண்: 1

மாவட்ட செய்திகள்

Most Popular

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில்...

வடகிழக்கு பருவமழை 15% குறைவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “வழக்கத்தை விட 15% வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது....

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பால்...

வேல் யாத்திரை என்ன ஆனது? – எல் முருகன் விளக்கம்

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் சென்னை விமான நிலையத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, “புயல் காரணமாக வேல் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி...
Do NOT follow this link or you will be banned from the site!