Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்?

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்?

டீரென கிடைக்கும் பண வரவு உடனடி செலவுகளை சமாளிக்கும். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம்.

02.01.2020 (புதன்கிழமை)
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல்  5.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 12 மணி முதல்  1.30 வரை
எமகண்டம் 
காலை 7.30 மணி முதல் 9 வரை

மேஷம்
சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்து விட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடினமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிகற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். திடீரென கிடைக்கும் பண வரவு உடனடி செலவுகளை சமாளிக்கும். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
ரிஷபம் 
விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ஒரு சோம்பேறி. நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். 
அதிர்ஷ்ட எண்: 9
மிதுனம் 
நண்பர் அல்லது தெரிந்த ஒருவரின் சுயநலமான நடத்தை உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
கடகம் 
உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நேரம் இது. அது உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை உணர வேண்டும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பம். ஆம், நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டக்காரர். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் நிச்சயம் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 2
சிம்மம் 
உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்துவதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும்.
அதிர்ஷ்ட எண்: 9
கன்னி 
உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அதிகம் தேவையாக இருக்கும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7
துலாம் 
வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
விருச்சிகம் 
பிறரை குற்றம் சொல்வதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். சில காலமாக நீங்கள் யோசித்து வந்தவாறு வேலையில் முக்கியமான மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது. சடங்குகள்,  ஹோமங்கள், புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். 
அதிர்ஷ்ட எண்: 3
தனுசு 
இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் – யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் அவர்களை புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 9
மகரம் 
உடல் நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். உங்கள் காதலரிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருகையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 8
கும்பம் 
நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6
மீனம் 
மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்களின் தாராள மனதை பிள்ளைகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளை அமல் படுத்த நல்ல நாள். இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4

 

Most Popular

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி

உத்தர பிரதேசத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்துக்கு சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!