Home ஆன்மிகம் எந்தெந்த திதியில் என்னென்ன செய்யலாம்?

எந்தெந்த திதியில் என்னென்ன செய்யலாம்?

எந்த திதியில் என்ன செயல்கள் செய்தால் வாழ்வில் முழுமையான பலன்களை பெறமுடியும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும்.சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள்.

thithiyu

பவுர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள்.சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். 

ஒரு திதிக்கு 12 பாகை.திதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது.அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன.இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். 

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை.தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.

பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். 

thithikui

துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம்  இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.

திருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். 

சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  

பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. 

சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். 

thithighj

சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். 

அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் இதற்கு அதிதேவதை ஆவார்.

நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். 

ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். 

thithirhjg

துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.

திரயோதசிசிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம்.எதிர்ப்புக்கள் விலகும்.தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். 

சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம்.இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை,வழிபாடுகளை செய்யலாம். தான மற்றும் தர்ம காரியங்களுக்கு உகந்த நாள் இது வாகும் . இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை...

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம்(39), சண்முகவேல்(40). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் ஆலய பூஜை - பிரதமர் மோடி பங்கேற்றார். காசி விஸ்வநாதருக்கு பிரதமரே நேரடியாக பூஜை செய்தார். தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபாதை...

“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், அரசின் அனுமதியின்றி பல நூறு ஏக்கர் நிலங்கள், விளை நிலங்கள் என்ற போர்வையில் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு, விற்பனை...
Do NOT follow this link or you will be banned from the site!