Home சினிமா எத்தன சந்தோஷம் தினம் கொட்டுது உன்னால: பேட்ட - தி ரஜினி மூவி

எத்தன சந்தோஷம் தினம் கொட்டுது உன்னால: பேட்ட – தி ரஜினி மூவி

முள்ளும் மலரும் காளி, தளபதி சூர்யா – இதோட பாதிப்புகள் பேட்ட வேலன், காளி கிட்ட பார்க்கலாம்.

– இளம்பரிதி கல்யாணகுமார்

“அடுத்த ரஜினி படம் கார்த்திக் சுப்பராஜ் தான் director” – இதான் வந்த first announcement. அப்ப ஜில்லுனு இருந்த feel படம் பாத்து முடிச்ச அப்புறமும் இருக்கு. announcementகு அப்றம் casting details, title launch, audio launch, teaser, trailerனு ஒவ்வொரு விஷயத்துலயும் ரஜினி படம்னு ஆச கூடிட்டே இருந்துச்சு. இந்த ‘ரஜினி படம்’ அப்படிங்கிற tag அவ்ளோ ஈஸியா கிடைச்சுட்ல. அந்த மனுஷனோட இத்தன வருஷ உழைப்பால சம்பாதிச்ச விஷயம். கடைசியா வந்த ரெண்டு படங்களான கபாலி, காலா ரெண்டுமே ரஜினிங்கிற நடிகன வெளில அற்புதமா காட்டுச்சு. ‘தேவை’ப்பட்ற படம்னு ரஞ்சித் அத செஞ்சிருந்தாலும் அதையும் ரஜினி படமாத்தான் ரஞ்சித் குடுத்தார். ஆனா, கார்த்திக் சுப்பராஜ் படம் எடுக்குறார்னு தெரிஞ்சதும் இது கண்டிப்பா முழுக்க முழுக்க ‘ரஜினி படம்’ தான் தோணுச்சு.

கார்த்திக் சுப்பராஜ். பக்கா தலைவர் ரசிகன். லிங்கா வந்தப்போ “Lingaa is a 3hr emotional talk between thalaivar and a fan who was heart broken when he was ill.Others won’t get it.” னு ஒரு tweet போட்ருந்தாப்ல. நிறைய பேர் கலாய்ச்சாங்க. ரஜனிய கொண்டாட்ற எல்லாருக்கும் இந்த tweet பொருந்துச்சு. ஒரு ரசிகன் தன்னோட ஹீரோவ எப்டிலாம் ரசிப்பாங்கிறது ரசிக்கத்தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும். நின்னா போதும், நடந்தா போதும் னு சொல்ற அளவுக்கு பைத்தியமா இருப்பாங்க. அதே ரசிகன்கிட்ட அந்த ஹீரோவ வச்சு நீ ஒரு படம் எடு பாக்கலாம் சொன்னா எதிர்பார்ப்பே வேற. ரோட்ல போற பொண்ணுகிட்ட போய் propose பண்ணுடா னு raggingல சொல்றப்போ அவனுக்கு என்ன பண்றதுனே புரியலன்னாலும் அந்த பொண்ணுகிட்ட போய் perform பண்ணி propose பண்ணுவான். அதுவே அவனுக்குப்பிடிச்ச பொண்ணுகிட்ட propose பண்ண சொன்னா கதையே வேறு கதை. வானத்த கீழகொண்டுவந்து கடல பறக்க வுட்ருவான். இத படம் பாக்குறதுக்கு முன்னாடி எழுதியிருந்தேன். படம் பாத்த அப்றமும் சொல்றேன் YES. ரஜினிய கொண்டாடிருக்காங்க படம் முழுக்க. 

rajini
 

இது முழுக்க முழுக்க ‘ரஜினி படம்’ தான். “This Film is inspired from, preformed by, dedicated to The Only One SUPERSTAR Rajinikanth” அப்டினு தான் படம் ஆரம்பிக்குது. ரஜினிகிட்ட இருந்து inspire ஆகி, ரஜினியையே perform பண்ண வச்சு, அத அவருக்கே dedicate பண்ணிருக்காங்க. GetRajinified னு hashtag போட்டதெல்லாம் நிஜம் தான். படத்தோட casting details ஒவ்வொண்ணா வந்துட்ருந்தப்போ இதுல ரஜினி cameo போல ன்னு நிறைய பேர் கலாய்க்கிறது பாத்தேன். இவ்ளோ பேர் வச்சுக்கிட்டு படத்துல எப்படி ரஜினிய காட்டப்போறார்னு தான் கேட்டாங்க எல்லாரும். இங்கயும் கார்த்திக் சுப்பாராஜ் ஏமாத்தல. இப்போ கூட அன்னிக்கி கலாய்ச்சவங்க எல்லாம் திரும்ப வந்து ‘ஏன் ரஜினி தவிர மத்த charactersஅ ஒழுங்கா use பண்ணல’னு விமர்சனம்(?) பண்ணலாம். திரும்பவும் கார்த்திக் சுப்பாராஜ் சொல்ற பதில் GetRajinified. த்ரிஷா கிட்ட பல்லேலக்கா பாட்டுக்கு dance ஆட கேட்டப்போ ரஜினி கூட நடிச்சா heroineஆ நடிப்பேன் இல்லனா மாட்டேன் னு சொல்லி மறுத்துட்டாங்க. 12 வருஷம் கழிச்சு rajini heroine அப்டிங்கிற பேருக்காகவே ஒண்ணுமே இல்லாத characterல நடிச்சிருக்காங்க. அதான் ரஜினி படம். இதுல நடிச்சிருக்க ஒவ்வொருத்தருக்கும் என்ன நடிக்கிறோம், என்ன character, எவ்ளோ weightage, எவ்ளோ dialoguesனு எதுமே கண்டுக்காம ரஜினி கூட நடிக்கிறோம் னு அந்த பெருமையான விஷயத்துக்காகவே நடிச்சிக்குடுத்துருக்காங்க. அதான் நாம audio launchலயும் பாத்தோம். விஜய் சேதுபதி, நவாஸுதீன் தவிர மத்த எல்லாருமே ரஜினி ரூம்ல வைக்கிற அழகுப்பொருட்கள் மாதிரி தான். just gap fillers. தெரிஞ்சே சந்தோஷமா நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி இவ்ளோ பெரிய இடத்துல இருக்கப்போ ரஜினிங்கற காரணத்துக்காக நடிக்கிறதும் rajini love.

petta

நாம 80s ல பாத்து ரசிச்ச ரஜினி செம்ம stylish. ரஜினிய style அடையாளத்துக்குள்ள கொண்டுவந்த படங்கள் எல்லாமே 80s வந்த படங்கள் தான். அவருக்குனு தனி அந்தஸ்து. பில்லா, முரட்டுக்காளை னு எல்லாமே கெத்து கட்டின படங்கள். சிகரெட்ட தூக்கிப்போட்டு பிடிக்கிறது, styleஆ கண்ணாடி போட்றது, துப்பாக்கி சுத்துறது, முடிய சிலுப்பி விட்டுகிறது, pant pocketக்குள்ள கை விட்டு styleஆ நடக்குறதுனு அந்த காலகட்டத்துல எதெல்லாம் பண்ணி நம்மல சந்தோஷப்படுத்தினாரோ அதெல்லாம் இந்த படத்துலயும் பண்ணிருக்கார். 

ppaeta

அப்றம் 90sல ரஜினியோட அவதாரம் மாறுச்சு. styleலயே சின்ன சேஷ்டையும் பண்ணி குழந்தைகளோட ரசிக்க வைக்கிறது. அந்த phase ல இருந்த ரஜினியத்தான் நாம பாத்து வளந்தோம். துள்ளலா, சிரிச்சு சந்தோஷப்படுத்துற மாதிரி ரஜினி. அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, அருணாச்சலம் னு எந்த படம் எடுத்தாலும் ரஜினிகிட்ட ஒரு comic sense கொட்டிக்கிடக்கும். என்னதான் comedians இருந்தாலும் அவர் பண்ண சேஷ்டைகள் எல்லாமே ரசிச்சிருப்போம். உதாரணத்துக்கு சொல்லனும்னா முத்து படம். அதுல காந்திமதி, வடிவேலு கூட பேசிட்டு குதிரை வண்டி சீன். அப்புறம் தீபாவளி பரிசு காத்திருக்கிறது னு parkல சந்திக்கிற scene. லலல்லல்லல்லானு துண்ட வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி ஓடற ரஜினிய யாருக்குத்தான் பிடிக்காது. இப்டிலாம் 80s, 90s ல ரஜினி பண்ண விஷயங்கள எல்லாம் ரஜினிகிட்ட இருந்தே inspire பண்ணி, அவரையே திரும்ப அதெல்லாம் பண்ண வச்சு, அத அவருக்கே dedicate பண்ணி ஒரு full fledged ரஜினி படமா வந்திருக்கு “பேட்ட”.

super star

மேல சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் திரும்ப screenல பாக்குறப்போ ஏதோ time travel மாதிரி ஒரு feel. மனசெல்லாம் சந்தோஷத்தோட சிரிச்சு கைத்தட்டி சத்தம்போட்டு screen முழுக்க ரஜினிய மட்டுமே ரசிச்சேன். எத்தன பேர் இருந்தாலும் நம்ம focus குமுதா ன்னு சொன்னாலும் frameல எத்தன பேர் இருந்தாலும் நம்ம focus ரஜினி தான். விஜய் சேதுபதி பார்வையில கூட அத ரசிக்க முடியும். கூட நடிக்கிறப்பவே ரசிச்சுட்டே தான் நடிச்சிருக்காங்க எல்லாருமே. நேத்து பேட்டில கூட ரஜினி இதத்தான் சொன்னார் “எல்லாத்துக்குமே கார்த்திக் சுப்பராஜ் தான் காரணம். என்ன உசுப்பேத்தியே நடிக்க வச்சுட்டார்” னு சிரிச்சுகிட்டே சொன்னார். முகமெல்லாம் சந்தோசம். அந்த வெள்ள தாடிய கடந்து வெளில கொட்டுச்சு.

படத்துல முக்கியமா அனிருத்கு பெரிய நன்றி சொல்லணும். படத்துல Background scoreல use பண்ணிருக்க பழைய பாடல்கள். அதெல்லாம் யாரு select பண்ணா னு தெரில. எல்லாமே செம்ம. ‘மலர்ந்தும் மலராத’ பாட்ட use பண்ண விதம். ப்பா. லவ் யூ அனி. எனக்கு காளியா பேட்டயா னு கேட்டா எனக்கு காளி தான்.

star

ரஜினி படம். வேற என்ன காரணம் இருக்கப்போகுது இப்டிலாம் கொண்டாடறதுக்கு. பாபால இருந்து எல்லா படமும் தியேட்டர்ல பாத்தாச்சு. சிவாஜில இருந்து எல்லா ரஜினி படமும் first dayஏ பாத்தாச்சு. ஆசையெல்லாமே இது தொடரனும். இன்னும் நடிக்கணும். பெரிய ஆசை இருக்கு. ரஜினி திரும்ப தில்லு முல்லு மாதிரி full fledged comedy பண்ணனும். காலா, கபாலி படங்கள் அவர்கிட்ட இருந்த அந்த class elementsஅ திரும்ப கொண்டுவந்துச்சு. பேட்ட படம் முழுமையான mass ரஜினிய கொண்டு வந்திருக்கு. ஆனா ரஜினியோடஅந்த இந்திரன்-சந்திரன் அவதாரங்கள ஏதாச்சும் ஒரு director திரும்ப கொண்டு வரணும்.

டைட்டில்ல கார்த்திக் சுப்பாராஜ் இயக்குனர்கள் மஹேந்திரனுக்கும், மணிரத்னத்துக்கும் நன்றி சொல்லிருந்தாப்ல. அவங்க ரெண்டு பேரும் தான் அவர்கிட்ட இருந்த mass-class ரெண்டையும் வெளில கொண்டுவந்த சீனியர் இயக்குனர்கள். (என்ன பொறுத்தவரைக்கும் ரஞ்சித் கூட இந்த category இயக்குனர் தான்)

முள்ளும் மலரும் காளி, தளபதி சூர்யா – இதோட பாதிப்புகள் பேட்ட வேலன், காளி கிட்ட பார்க்கலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பகலில் தொடுவாங்க ,ராத்திரியில் கெடுப்பாங்க ” -லாக்கப்பில் சிக்கிய பெண்ணை நாசம் செய்த ஐந்து போலீஸ்.

ஒரு கொலை வழக்கில் சிக்கிய 20 வயது பெண்ணை சிறைக்காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து பத்து நாட்கள் பலாத்காரம் செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

வழக்கறிஞர் உள்பட இருவர் படுகொலை : ஒரேநாளில் நடந்த இரட்டைக்கொலையால் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். கும்பகோணம் குப்பம்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ். இவர்...

அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!

வட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா அலாஸ்கா கடற்கரைப்...

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை, வடபழனி,...
Do NOT follow this link or you will be banned from the site!