Home தமிழகம் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுதில்லி: எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. அதனடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட்  மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

இன்னும் சரியாக ஏழே நாட்கள்தான் இருக்கின்றன அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில்...

“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் 10,978 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் நிலை...

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு...

‘என்தோழி’- ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு படை!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் அவர்கள் வீடு சென்று சேரும் வரை பெண்போலீசாரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
Do NOT follow this link or you will be banned from the site!