Home அரசியல் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை, ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை, ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

eps-and-tamilisai

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “
தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற பிரார்த்திப்பதோடு தங்களின் மகத்தான மக்கள் சேவை தமிழ்நாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ் பேச்சில் உடன்பாடு

அதிமுக கூட்டணியில் தேமுகதான் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறது. 40 தொகுதிகளில் ஆரம்பித்து 25 தொகுதிகளுக்கு தேமுதிக இறங்கி வந்துவிட்டது. 12 தொகுதிகளில் ஆரம்பித்து 13 தொகுதிகள் வரைக்கும்...

ஓடிப்போன கணவன் -தேடிப்போன மனைவி -கேடித்தனம் செஞ்ச மந்திரவாதி

ஒரு பெண்ணின் காணாமல் போன கணவனை தேடி கொடுப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்த  ஒரு மந்திரவாதியால் அந்த பெண் தற்கொலை  முயற்சி...

கிருஷ்ணசாமி கட்சிக்கு ‘அந்த’ சின்னத்த ஒதுக்குங்க – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகத்தில்...

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தினகரன் கலைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சசிகலா அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது தினகரனுக்கு பேரதிர்ச்சியாம். அமமுக...
TopTamilNews