எங்களுக்கு ஆண் குழந்தையே பிறக்கல! கணவனுக்கு சிறுமியை திருமணம் செய்துவைத்த பாசமிகு மனைவி!! 

கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த மனைவி தனது கணவனுக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த மனைவி தனது கணவனுக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. 
ஆண் குழந்தை இல்லாததால் கணவனுக்கு 2 ஆவது திருமணம் முடிக்க செல்லக்கிளி ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகில் 10 வகுப்பு முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமியை தனது கணவனுடன் சகஜமாக பழக வைத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொண்டால் வசதியாக வாழவைக்கிறேன் என அந்த ஏழை சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார் அசோக் குமார். இந்த வார்த்தைகளுக்கு மயங்கிய சிறுமி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். 

photo1

கடந்த வியாழக்கிழமை சிறுமியின் தந்தையிடம் சென்று, மகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஓகலூர் கிராமத்துக்கு அசோக்குமார்- செல்லக்கிளி தம்பதியினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கோவிலில் திருமணத்தை முடித்த அசோக் குமார் கோனூர் கிராமத்தில் தனக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் இருவரையும் தங்கவைத்துவிட்டு செல்லக்கிளி வீடு திரும்பியுள்ளார். அந்த வீட்டில் அசோக் குமார் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 

கோவிலுக்கு சென்ற சிறுமியை காணததால் அசோக் குமார் மீது சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோனூரில் இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்துக்காக அசோக் குமார்- செல்லக்கிளி தம்பதியினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Most Popular

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...