Home அரசியல் எங்களுக்குப் பாராட்டு வேண்டாம்... நிதி உதவிதான் வேண்டும்! - கேரள நிதி அமைச்சர் காட்டம்

எங்களுக்குப் பாராட்டு வேண்டாம்… நிதி உதவிதான் வேண்டும்! – கேரள நிதி அமைச்சர் காட்டம்

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசும்போது ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். ஆனால், எந்த ஒரு பொருளாதார திட்டம் பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் பாராட்டு தேவையில்லை நிதி உதவித் திட்டங்களே தேவை என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசும்போது ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். ஆனால், எந்த ஒரு பொருளாதார திட்டம் பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

thomas-issc-78

அதற்கு அவர், “மாநிலத்துக்குத் தேவையான பொருளாதார மீட்பு உதவித் திட்டம் எதையும் அறிவிக்காமல் மாநிலத்தைப் புகழ்ந்து பேசுவதால் என்ன ஆகிவிடப் போகிறது. இந்த மோசமான நிலையிலும் வங்கிகள் மாநிலங்களிடமிருந்து மிக அதிக அளவில் வட்டியை வசூலிக்கின்றன. இதனால் கேரளா மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கிறது. இந்த தொற்று நோய் பரவுதலைத் தடுக்க கேரளா மிகச்சிறப்பான வழிகளைக் கையாண்டு வருகிறது என்று மோடி பாராட்டினார். எங்களுக்கு பாராட்டு தேவையில்லை, நிதி உதவிதான் தேவைப்படுகிறது” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்டு, ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு...

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பிரச்சினையாக உருவெடுத்தாலும், பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுகிறது.

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இளைஞர்...
TopTamilNews