எங்ககிட்ட வாங்கலன்னா! இன்னும் வரி போடுவோம்…. மீண்டும் மிரட்ட தொடங்கிய டிரம்ப்…..

சொன்னபடி வாங்கலன்னா இன்னும் கூடுதலாக வரி போடுவோம் என சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்காவில் அதிகளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கருதுகிறார். அதன் தொடர்ச்சியாக இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது பல ஆயிரம் கோடி கூடுதல் வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது.

ஜின்பிங்
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக மோதலால் சர்வதேச வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 நாடுகள் உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது அமெரிக்க வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்வதாக டிரம்பிடம் ஜின் பிங் வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என இருவரும் கூட்டாக அறிவித்தார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி

இதனால் வர்த்தக போர் அபாயம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல் டிரம்ப் தனது  ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். சொன்னப்படி சீனா எங்களது வேளாண் பொருட்களை வாங்கவில்லை என்றால் மேலும் சீன பொருட்கள் மீது வரியை போடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக போர் காரணமாகத்தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

இந்நிலையில், அமெரிக்கா மீண்டும் கூடுதலாக வரி விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளதை சீனா எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Most Popular

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...