Home இந்தியா ஊழியர்களை வெளியேற்ற.. திட்டம் வகுத்து வரும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம்!

ஊழியர்களை வெளியேற்ற.. திட்டம் வகுத்து வரும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம்!

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய திட்டமொன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் வகித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெளியாகிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செல்லுலார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவிகளை அள்ளித் தந்து வருகிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை நிறுவனத்தை சற்றும் கண்டுகொள்ளவில்லை. வருடாந்திர தொகையைக் கூட மத்திய அரசிடமிருந்து பெறவில்லை என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படும் என தகவல்கள் வெளிவந்தன. 

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய திட்டமொன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் வகித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெளியாகிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செல்லுலார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவிகளை அள்ளித் தந்து வருகிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை நிறுவனத்தை சற்றும் கண்டுகொள்ளவில்லை. வருடாந்திர தொகையைக் கூட மத்திய அரசிடமிருந்து பெறவில்லை என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படும் என தகவல்கள் வெளிவந்தன. 

bsnl

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நஷ்டத்தில் இயங்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற விருப்ப பணி ஓய்வு திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் சி.கே.புர்வார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இது மிகச்சிறப்பான விருப்ப ஓய்வுத்திட்டம். இந்த திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். இதனைப் பயன்படுத்தி ஓய்வு பெற விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பணியில் உள்ள ஒன்றரை லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.

50 வயதை அடைந்தவர்கள், அதற்கு கூடுதலான வயதினர் விருப்ப ஓய்வு வரம்புக்குள் வருகிறார்கள். குறைந்தது 80 ஆயிரம் ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி விருப்ப ஓய்வு பெற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள செலவு ரூ.7000 கோடி குறையும் என அவர் தெரிவித்தார்.

bsnl

விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பயன்கள்:

#1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

#2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.

எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும். நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைத்து புத்துயிரூட்டவும், அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் ரூ.69 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு கடந்த மாதம் முடிவு செய்துள்ளது.

Most Popular

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்முறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்சாதி...

தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

கொரோனா காலம் என்பதால் ரஜினி பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93...

டூவீலர், கார்கள் சிக்கி அவதி: ஈரோடு மரப்பாலத்தின் அவலம்

ஈரோடு மரப்பாலத்தில் உள்ள பள்ளத்தினால் கார்களும், டூவீலர்களும் சிக்கி அவதிக்கு உள்ளாகிறார்கள். ஈரோடு கொலைகார வீதியைச் சேர்ந்தவர் குரு (வயது 35). இவர் இன்று காலை...

முதல்வர் வேட்பாளராகிடனும்! கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்

முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டி வரும் பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஐந்து மணி...
Do NOT follow this link or you will be banned from the site!