Home அரசியல் ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்

ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்

நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சரும், நெருஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை தமது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கியது, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் உயர்த்தி நிர்ணயித்தது ஆகிய குற்றச்சாட்டுகள்  குறித்து தமிழக காவல்துறையின் கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. ஆனால், கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணை நம்பிக்கையளிக்கும் வகையில்  இல்லை என்பதால் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு நீதிமன்றம் மாற்றியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்கு முன், 2011-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவரது இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரி தமிழக ஆளுநர்களிடம் 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளது. அப்போதெல்லாம் ஆளுநர்களின் உதவியுடன் தப்பி வந்த எடப்பாடி இப்போது சிபிஐயிடம் சிக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விலக வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு!

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி என்பதால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றி விடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் தனக்கு ஒரு வீடு இருக்க...

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளில் உருவாக்கிடவும், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்த பயன்படுத்தவும் , மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் , நீர்வளத் துறை...

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒலிம்பிக் போட்டியை கொரோனா வைரஸ் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது. கடந்த ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த...
- Advertisment -
TopTamilNews