Home தமிழகம் ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு, மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அ.தி.மு.க நிர்வாகி! - போலீசுக்கு மிரட்டல்

ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு, மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அ.தி.மு.க நிர்வாகி! – போலீசுக்கு மிரட்டல்

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் இருப்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளர் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு, மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அ.தி.மு.க நிர்வாகி! - போலீசுக்கு மிரட்டல்

கள்ளக்குறிச்சியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய அ.தி.மு.க நிர்வாகி, மது எப்படி கிடைத்தது என்று என்னிடம் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கூறி காரில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் இருப்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளர் என்று கூறப்படுகிறது.  அரசும் அமைச்சர்களும் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அ.தி.மு.க-வினர் நடமாட்டம் பெரிய அளவுக்கு இல்லை. எதிர்க்கட்சிகள் அரசிடம் கொடுத்த கொரோனா நிவாரண உதவிகளை தாங்கள் கொடுப்பது போல போட்டோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இவர் கள்ளக்குறிச்சியில் மது அருந்திவிட்டு வேகமாக காரில் வந்திருக்கிறார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த பிரமுகர், என் சொந்த ஊரே கள்ளக்குறிச்சிதான் என்று ஆவேசமாக பதில் அளிக்கிறார். சொந்த ஊர் கள்ளக்குறிச்சியா இருந்தாலும் அடுத்த தெருவுக்கு போகவே அனுமதி கிடையாது, அதில் ஊரடங்கு நேரத்தில் குடிக்க வேற செய்திருக்கின்றீர்கள். உங்களுக்கு மது எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது, பதில் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுவேன் என்கிறார். உங்களை எல்லாம் விசாரிக்கத்தான் அரசு எங்களை இங்கே நிப்பாட்டியுள்ளது என்று அந்த அதிகாரி கூறியதும் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக அங்கிருந்து புறப்படுகிறார்.
அரசும் அதிகாரிகளும் தீவிரமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்க அ.தி.முக பிரமுகர்களே மது அருந்திவிட்டு சாலைகளில் சாவகாசமாக சுற்றித் திரிவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு, மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அ.தி.மு.க நிர்வாகி! - போலீசுக்கு மிரட்டல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...
- Advertisment -
TopTamilNews