Home உலகம் ஊரடங்கு முடியலாம்... சமூக விலகல் 2022 வரை தேவைப்படலாம்! - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ஊரடங்கு முடியலாம்… சமூக விலகல் 2022 வரை தேவைப்படலாம்! – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படலாம், ஆனால், மக்களிடையே சமூக விலகல் என்பது 2022ம் ஆண்டு வரை தேவைப்படக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரக்கைவிடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படலாம், ஆனால், மக்களிடையே சமூக விலகல் என்பது 2022ம் ஆண்டு வரை தேவைப்படக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரக்கைவிடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவுதல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிவிடும் என்று கூறுவதற்கு இல்லை என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

social-distancing-785

இது தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலில், “முறையான சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ உருவாக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான சமூக விலகல் நடைமுறைகள் அவசியம். கொரோனா பரவுதல் உள்ள இடங்களில் ஊரடங்கு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தடை போன்றவை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் 2022ம் ஆண்டு வரை சமூக விலகல் கடைப்பிடிப்பது கட்டாயம். 
கொரோனா தொற்று ஏற்பட்ட நபருக்கு உடலில் கொரோனா கிருமிக்கு எதிராக உருவான எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கிறது, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் அவர்களைக் காக்கிறதா என்று எல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஒரே மணி நேரத்தில் மூன்று முறை… ” -பேஸ் புக் நண்பர்களால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

ஒரு பெண்ணோடு சமூக ஊடகத்தில் பழகி அவரை நான்கு நண்பர்கள் சேர்ந்து கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும் .

விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற...

பருவமழை முன்னெச்சரிக்கை : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

வருவாய்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று...

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!