Home லைப்ஸ்டைல் ஊரடங்கு காலத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்க 6 வழிமுறைகள்

ஊரடங்கு காலத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்க 6 வழிமுறைகள்

ஊரடங்கு காலத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்க 6 வழிமுறைகளை பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்!

இந்த ஊரடங்கு நேரத்தில் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு கடினமான காலமாக அமைந்துள்ளது. அவற்றை வெளியில் வாக்கிங் கூட்டிச் செல்ல கூட முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் செல்லப் பிராணிகளுக்கும், அதை வளர்ப்பவர்களுகும் இந்த கொரோனா ஊரடங்கு நேரம் சோதனைக் காலமாக அமைந்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்க 6 வழிமுறைகளை பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்!

pets

உங்கள் செல்லப் பிராணியை வாரத்திற்கு ஒரு முறையாவது குளிப்பாட்ட வேண்டும். அவைகளின் காதுகளில் தண்ணீர் போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், செல்லப் பிராணிகளின் முகத்தில் ஷாம்பு பூசி குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

pets

உங்கள் செல்லப் பிராணியின் கால்களில் நகங்கள் வளர்ந்திருந்தால், முடிந்தவரை அவற்றை வெட்ட முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் நாய் அல்லது பூனையால் நீங்கள் காயப்பட்டு, இரத்தம் கொட்ட வாய்ப்புள்ளது.

pets

உங்கள் நாயின் காதுகளை தவறாமல் சரிபார்க்க வேண்டும். அவற்றின் காதுகளில் மெழுகு அல்லது அழுக்கைக் கண்டால், சிறிது பருத்தி துணியை எடுத்து உங்கள் விரலில் சுற்றிக் கொண்டு காதுகளின் உள்ளே ஆழமாக விரல்களை நுழைக்காமல் மேலோட்டமாக அதன் காதுகளை சுத்தம் செய்யுங்கள். இதனால் உங்கள் செல்லப் பிராணிக்கு காதுகளில் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று வராமல் இருக்கும்.

pets

உங்கள் செல்லப் பிராணியின் ரோமங்களை கத்தரிப்பதை தவிர்க்கவும். அதனால் நீங்கள் காயம் அடைய வாய்ப்புள்ளது. உங்கள் செல்லப் பிராணிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுப்பதை பின்பற்றுங்கள். இது அக்னி நட்சத்திர காலம் என்பதால் பிற்பகல் வேளையில் செல்லப் பிராணிகளின் உடல் வெப்பநிலையைத் தக்க வைக்க அவற்றுக்கு உப்பு இல்லாமல் சிறிது மோர் கொடுக்கலாம்.

pets

உங்கள் செல்லப்பிராணியுடன் தினமும் ஒரு முறையாவது 15 முதல் 20 நிமிடங்கள் வரை விளையாடுங்கள். அவற்றை வீட்டைச் சுற்றி ஓடச் செய்யுங்கள். ஒரு பந்தை எறிந்து அதை அவர்கள் திரும்பக் கொண்டு வரச் செய்யுங்கள். செல்லப் பிராணிகளின் தசைகள் உடற்பயிற்சி செய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.

pets

ஆக மொத்தத்தில்…ஊரடங்கு காலத்தில் உங்கள் சுய சுகாதார பாதுகாப்புக்காக நேரத்தை செலவழிக்கும் அதேசமயம் செல்லப்பிராணிகளின் பராமரிப்புக்காகவும் அதிக நேரம் ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் சோதுபதி மற்றும் புகழரசி ஆகியோருக்கு ஆட்சியர் சிவராசு சால்வை அணிவித்து...

எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?

யாரும் எருமைப்பால் உடலுக்கு தீங்கானது என்று சொல்லவில்லை.. ஆனால் பால் என்றாலே நம்மவர்களுக்கு பசும்பால்தான்..உண்மையில் பசும்பாலைப் போலவே எருமைப்பாலும் உடலுக்கு மிகச் சிறந்த நண்மைகளை வழங்குகிறது.இதனைப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

டிக் டாக்க்கிற்கு தடை விதித்திருந்த பாகிஸ்தான், தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற செயலிகளுள் முக்கியமான ஒன்று டிக் டாக். சீன...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது . வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
Do NOT follow this link or you will be banned from the site!