Home விளையாட்டு உலக பெண்கள் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு சென்ற இந்திய வீராங்கனை!

உலக பெண்கள் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு சென்ற இந்திய வீராங்கனை!

டெல்லியில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

புதுடெல்லி: டெல்லியில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

10வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று சுற்று  கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3வது ரவுண்டில் தொடக்கத்தில் தற்காப்பு பாணியை கையாண்ட சோனியா கடைசிக் கட்டத்தில் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு, நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன் முடிவில் 5-0 என்ற கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 30-27) சோனியா சாஹல் வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்குக் குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் ஆலய பூஜை - பிரதமர் மோடி பங்கேற்றார். காசி விஸ்வநாதருக்கு பிரதமரே நேரடியாக பூஜை செய்தார். தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபாதை...

“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், அரசின் அனுமதியின்றி பல நூறு ஏக்கர் நிலங்கள், விளை நிலங்கள் என்ற போர்வையில் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு, விற்பனை...

சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின் தற்கொலை: விசாரணையை இழுத்தடிப்பது ஏன்?

சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின் தற்கொலை வழக்கில் விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. மத்திய உளவுத்துறை அதிகாரியான விசாகபட்டினத்தை சேர்ந்த ஹரிஷ்குமார், அதே விசாக...

வைகை அணையில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர தேடலுக்கு பின் சடலமாக மீட்பு

தேனி ஆண்டிப்பட்டி அருகே நேற்று வைகை அணைப்பகுதியில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர தேடலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டம...
Do NOT follow this link or you will be banned from the site!