Home உலகம் உலக சுகாதார அமைப்புக்கு ரூ.3000 கோடி நிதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்புக்கு ரூ.3000 கோடி நிதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை குறைக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

அந்த அமைப்பின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு நிதியை குறைக்கப் போகிறார் என்பது பற்றி அவர் எந்த விவரமும் அப்போது அவர் குறிப்பிடவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மிகவும் சார்புடையதாக நடந்து கொள்கிறது. அது சரியல்ல என்று அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

world health organization

இதைத் தொடர்ந்து, கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த ரூ.3000 கோடி நிதியை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா விஷயத்தில் அமெரிக்க அதிபருக்கும், உலக சுகாதார அமைப்புக்கும் நடந்த கருத்து மோதலை தொடர்ந்து நிதியை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இளமை துள்ளும் தாத்தாவாக வளையவந்தவர்… நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.. கமல்

பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மலையாளப்படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்....

15,223 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,223 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை...

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள், டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்ட...

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம், இனவெறிக்கு எதிரான உத்தரவு, இஸ்லாமியர்களுக்கான தடை நீக்கம், மெக்சிகோ சுவர் உள்ளிட்ட அதிமுக்கியமான 15 கோப்புகளில் அதிவேகமாக புதிய அதிபர் ஜோ பைடன்...
Do NOT follow this link or you will be banned from the site!