Home விளையாட்டு கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்!

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி, 12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.

world cup

இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

world cup

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

world cup indian team

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் ஷங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்த்ரா சாஷல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டியில், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்த நிலையில், ரிஷப் பன்ட்-க்கு அதிக வாய்ப்பு என கூறப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

வழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி?!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல்...
- Advertisment -
TopTamilNews