உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

இன்றைய காலகட்டத்துக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மிரட்டலான பல சிறப்பம்சங்களுடன் எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே டிசைன் உடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்.

தற்போது ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் அட்டகாசமான மெட்டல் கிளாஸ் வடிவமைப்புடன் கூடி சிறந்த ஆற்றல் கொண்ட சூப்பர் கூல் ஸ்மார்ட்போனாக ஜனவரி 29 ஆம் தேதி களமிறங்கியுள்ளது. இதன் தோற்றமே அனைவரையும் தன வசம் வசியம் செய்துவிட்டது.

இதன் ஆற்றலை உணர்ந்தவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் தான் என்று நிச்சயம் சொல்லும் விதம் அமைத்துள்ளது.

முதல் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்:

honor

உலகின் முதல் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை ஹானர் நிறுவனம் உருவாகியுள்ளது. சிறப்பான வீடியோ அனுபவம் மற்றும் கேமிங் அனுபவத்தை அட்டகாசமான தரத்துடன் தடையில்லாமல் முழு திரையில் அனுபவிக்க இந்த ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இல் இதுவரை எந்த மொபைல் நிறுவனமும் செய்திடாத முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் அடைந்துள்ளது. ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் கூடிய இன்பில்ட் முன்பக்க டிஸ்பிளே கேமரா சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்து சாதனைப் படைத்துள்ளது.

100% திரையைப் பயன்படுத்தி அத்துடன் கேமரா சேவையையும் இணைத்துச் சிறந்த அனுபவத்தை ஹானர் நிறுவனம் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் மூலம் வழங்கியுள்ளது. பிரீமியம் மெட்டல் கிளாஸ் வி கிரேடியன்ட் டிசைன்: ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஒரு பிரத்தியேக கலைப்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டு, மலேசிய ஓவியரான ரெட் ஹாங் யியுடன் இணைந்து பிரத்தியேகமான பிரீமியம் மெட்டல் கிளாஸ் வி கிரேடியன்ட் டிசைனை ஹானர் நிறுவனம் உருவாகியுள்ளது.

2,000 கண்ணாடியை மறுசுழற்சி செய்து இந்த பிரீமியம் மெட்டல் கிளாஸ் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்புறத்தில் விழும் ஒவ்வொரு வெளிச்செல்லையும் பிரதிபலிக்கும் எட்டு மின்னும் அடுக்குகளைக் கொண்டிருக்கும் படி இதன் பின்புற பேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாகத் தனிப்பட்ட ‘வி’ பேட்டர்ன் முறை கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மாறுபாடுகளுடன் உங்களின் கண்களுக்கு விருந்தாக இயற்கையின் அழகிய நிறங்களைச் சமர்ப்பித்து அரோரா நிகழ்வு பற்றி உங்களுக்கு நினைவூட்டும் படி இந்த டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.எல்.ஆர் கேமராவுக்கு நிகரான கேமரா: 

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன் 48 மெகா பிக்சல் கேமரா சேவை நிச்சயம் ஒரு புதிய புரட்சியை ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் உள்ள பின்பக்க கேமராவில் Sony IMX586 உடன் கூடிய CMOS இமேஜ் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

honor

நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் மிக துல்லியமான விவரங்களுடன் கிடைக்கிறது. ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு 60 விதமான பிரிவுகளில் மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது. இந்த கேமராவில் சூப்பர் ஸ்லொவ் மோஷன் வீடியோகள் 960fps விகிதம் ரெக்கார்ட் செய்ய முடியும். சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது.

மிகவும் மேம்பட்ட சிப்செட்: 

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் உலகின் முதல் 7nm மொபைல் ஏ.ஐ கிரீன் சிப்செட் 980 ஏ.ஐ ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 20% கூடுதல் வேகம் மற்றும் 40% சதவீதம் அதிக ஆற்றல் மற்றும் 120% அதிகப்படியான ஏ.ஐ சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஏற்படும் ஹீட்டிங் பிரச்சனைகளைச் சமாளிக்க 9 குளிங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் கூடிய 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களாக விற்பனைக்கு வந்துள்ளது

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....