Home க்ரைம் உறவுக்கு அழைத்தேன் ஒத்துழைக்கவில்லை, பிறப்புறுப்பை துண்டித்தேன்: சைக்கோ கில்லரின் பகீர் வாக்குமூலம்!

உறவுக்கு அழைத்தேன் ஒத்துழைக்கவில்லை, பிறப்புறுப்பை துண்டித்தேன்: சைக்கோ கில்லரின் பகீர் வாக்குமூலம்!

ஓரின சேர்க்கையின் போது ஒத்துழைப்பு அளிக்காததால் தான் இருவரின் பிறப்புறுப்பைத் துண்டித்ததாக சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை: ஓரின சேர்க்கையின் போது ஒத்துழைப்பு அளிக்காததால் தான் இருவரின் பிறப்புறுப்பைத் துண்டித்ததாக சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். 

கூடங்குளத்தைச் சேர்ந்தவர்  நாராயணன். இவர்  சென்னை மாதவரம் ரெட்டேரி  மேம்பாலத்தின்  கீழ் மதுபோதையில் கடந்த 4ஆம் தேய்  இரவு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் பிறப்புறுப்பை யாரோ துண்டித்துள்ளனர்.  இதையடுத்து அவருக்கு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

kiler

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை ஓரினச் சேர்க்கைக்கு ஒருவர் அழைத்தார் என்றும் அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததால் பிறப்புறுப்பைத் துண்டித்தார் என்றும் பகீர் வாக்குமூலம் அளித்தார்.

இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஸ்லம்பாஷா என்பவரின்  பிறப்புறுப்பு  துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது போன்ற தொடர் சம்பவத்தால்   தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

killer

விசாரணையில், அங்கிருந்த பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கிடமான ஒருவரின் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்  வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டில்  வேலை பார்த்து வந்த முனுசாமியை  கைது செய்தனர்.

cctv

இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். ஓரினசேர்கையாளரான முனுசாமி, மேம்பாலத்தின் கீழ் படுத்திருந்த  அஸ்லாம் பாஷாவிடம்  அத்துமீறிய போது அவர்  சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் அவர்களின் பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளார். இதன் பிறகு ஒருவாரம் அந்த பக்கம் தலைகாட்டாமல் இருந்த அவர், கடந்த 2–ந்தேதி மீண்டும் அங்கு வந்துள்ளார்.அப்போது அங்கு நாராயணன் குடிபோதையில் படுத்திருக்க, அவரை தட்டி எழுப்பி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த போது அவர் மறுத்துள்ளார். இதனால் அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து அதை கொண்டு அவரது பிறப்புறுப்பை  அறுத்துவிட்டுத் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த  அஸ்லம்பாஷா குடும்ப பிரச்சனையால் தானே தானே தன்னுடைய பிறப்புறுப்பைத் துண்டித்துக் கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்தார். ஓரின சேர்க்கை குறித்து வெளியில் கூற தயக்கம் காட்டியதால் தான் அவர் தவறான தகவலை கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“என்ன பண்ணாலும் பெண்ணாவே பொறக்குதே “கோபத்தில் ஒரு கணவர் என்ன பண்ணார் பாருங்க..

தன்னுடைய மனைவி தொடர்ந்து பெண் குழந்தையாக பெற்றதால் ஒரு கணவன் அவரை விவகாரத்து செய்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை கவலைக்கிடம் : சோகத்தில் சக நடிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் மக்களின் கவனம்...

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...

“இரவு முழுவதும் உறவு கொண்ட காதலர்கள் ..”காலையில் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!