நடிகைகளுக்கு பஞ்சமில்லாத சினிமா உலகில், பலரும் தொட யோசிக்கும், காமெடியை கையில் எடுத்து வியக்க வைக்கிறார்.
தமிழில் வீரம், ஜில்லா, ப.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வித்யூலேகா ராமன். இவர் சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். சந்தானம் ஜோடியாக இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார். நடிகைகளுக்கு பஞ்சமில்லாத சினிமா உலகில் பலரும் தொட யோசிக்கும், காமெடியை கையில் எடுத்து வியக்க வைக்கிறார்.
இந்நிலையில் வித்யூலேகா ராமன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘உடல், உருவம் எல்லாம் அழகு தான். இது தெரியாமல் உருவத்தை வைத்தும், நிறத்தை வைத்தும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அவர்களின் மனது காயப்படும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இவ்வாறு செய்து வருகிறோம்.
இதற்கு திரைப்படங்களும் முக்கியத்துவம் அளிக்கிறது. உருவகேலி செய்யும் காட்சிகளில் நடிப்பதை நடிகர் நடிகைகள் தவிர்க்க வேண்டும்’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
வித்யூலேகா ராமனும் உருவகேலிக்கு ஆளாகியுள்ளதாகப் பலமுறை கூறியுள்ள நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து சில புகைப்படங்களையும் இணையத்தில் உலவவிட்டுள்ளார்.