Home தமிழகம் "உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது" மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!

“உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது” மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தடையை மீறி வெளியே செல்கிறார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

"உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது" மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தடையை மீறி வெளியே செல்கிறார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய விவசாய அணி செயலாளருமான கதிர் தண்டபாணி தடையை மீறி வெளியே வந்தது மட்டுமில்லாமல் பெண் போலீசிடம் தகராறு செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

ttn

நேற்று சேலம் நெடுஞ்சாலையில் காரில் சென்ற அவரை, சுங்கசாவடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ், அனுமதி சீட்டை காட்டுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பாஸ் இல்லை என்றும் காரை ஓரங்கட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்த போலீஸ், மது எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டதற்கு, உன்கிட்ட பதில் சொல்ல முடியாது, வேறு யாரை வேண்டுமானாலும் வரச்சொல்லு என்று கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.  144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தது, மட்டும் இல்லாமல் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீதுபோலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது" மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி த்ரில் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம்...

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

வெப் சீரிஸ் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், அந்தப் படங்களைத் தனியாக செல்போன் ஆப் (HotShots) ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது....
- Advertisment -
TopTamilNews