Home சினிமா 'உத்துப்பார்த்தா அது பைத்தியம் தம்பி': மீண்டும் அட்ராசிட்டியை ஆரம்பித்த சாண்டி & கோ

‘உத்துப்பார்த்தா அது பைத்தியம் தம்பி’: மீண்டும் அட்ராசிட்டியை ஆரம்பித்த சாண்டி & கோ

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ  வெளியாகியுள்ளது. 

'உத்துப்பார்த்தா அது பைத்தியம் தம்பி': மீண்டும் அட்ராசிட்டியை ஆரம்பித்த சாண்டி & கோ

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது. இந்த வாரம்  லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கிராம  வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் வகையில் பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்ற இரு கிராமங்களாக ஹவுஸ்மேட்ஸ்  பிரிக்கப்பட்டு ஆளுக்கொரு கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். 

madhu

நேற்றைய போட்டியில் சாண்டி  மதுமிதாவை கிண்டல் செய்துவிட பொங்கி எழுந்த மதுமிதா அடுத்தவங்க வலிய பாத்து சிரிக்கிறவன் ஆம்பளையா?  என சொல்லி காரி துப்பினார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்லாது ரசிகர்களும்  அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னர் மதுமிதாவிடம் சாண்டி  மன்னிப்பு கேட்டு வெள்ளை கொடியைப் பறக்கவிட்டார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3-ன் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கவினும் சாண்டியும் சேர்ந்து வில்லுப்பாட்டு பாடும் வகையில், ‘எப்பவுமே நம்ம பிக் பாஸ் வீட்டுல எவ்வளவு தான் சண்டை இருந்தாலும், சோறுன்னு ஒன்னு வந்த அப்புறம் எல்லாத்தையும் மறந்து சோத்த திங்கறதுக்காக எல்லாரும் வந்துடுவோம். ஆனா நம்ம அதை மறந்துடுறோம் இல்லையா?அத நியாபகப்படுத்துற வகையில, ஊருவிட்டு ஊருவந்து வம்புக்கிம்பூ பண்ணாதீங்க, விட்டுட்டு தம்பி அது வேணாம் தம்பி உத்துப்பார்த்தா அது பைத்தியம் தம்பி’ என்று பாடுகிறார்.

sandy

நேற்றைய நிகழ்ச்சியில் சண்டையும் சச்சரவுமான இருந்த பிக் பாஸ் வீடு இன்று மீண்டும் அதே கேலியும் கிண்டலுமாக மாறியுள்ளது போல் தெரிகிறது. 

'உத்துப்பார்த்தா அது பைத்தியம் தம்பி': மீண்டும் அட்ராசிட்டியை ஆரம்பித்த சாண்டி & கோ
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மதுபோதையில் பணிக்கு வந்த மருந்தாளுநருக்கு மெமோ… திண்டுக்கல் அரசு மருத்துமனை அதிரடி!

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி...

ஸ்டாலினிடம் அற்புதம்மாள் வைத்த திடீர் கோரிக்கை!

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை...

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...
- Advertisment -
TopTamilNews