Home சினிமா உதவி இயக்குநர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்த முதல் இயக்குநரின் 61 வது பிறந்தநாள் இன்று...

உதவி இயக்குநர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்த முதல் இயக்குநரின் 61 வது பிறந்தநாள் இன்று…

’90ல் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் கே.எஸ். ரவிக்குமாருக்கு இன்று 61வது பிறந்தநாள்.ரஜினி,கமல்,அஜித்,விஜய், உள்பட அத்தனை சூப்பர் ஸ்டார்களுக்கும் அவர்களது பெஸ்ட் வசூல் படத்தை கொடுத்தவர் என்ற பெயர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உண்டு.

உதவி இயக்குநர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்த முதல் இயக்குநரின் 61 வது பிறந்தநாள் இன்று…

’90ல் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் கே.எஸ். ரவிக்குமாருக்கு இன்று 61வது பிறந்தநாள்.ரஜினி,கமல்,அஜித்,விஜய், உள்பட அத்தனை சூப்பர் ஸ்டார்களுக்கும் அவர்களது பெஸ்ட் வசூல் படத்தை கொடுத்தவர் என்ற பெயர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உண்டு.

கே.எஸ்.ரவிக்குமாரின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்களிடம் அவர் காட்டும் கண்டிப்பான அன்பு. அவரது பிறந்த நாளை ஒட்டி ‘உச்சக்கட்டம்’படத்தின் இயக்குநரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ‘தசாவதாரம்’ வரை பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான கேபிபி நவீன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு…

உதவி இயக்குநராக லட்சங்களில் சம்பளம் வாங்க வைத்த முதல் இயக்குநர்…

ஒவ்வொரு இவரது வெளிநாட்டு பயணங்களின் போதும்..
அனைத்து உதவி இயக்குநருக்கும் 
தனித்தனி அன்பளிப்புகள்..ஒரு தனி சூட் கேஸில் அலுவலகம் வந்து நம் கரத்திற்கு வந்து சேரும்..

நல்ல சீன்.. சொன்னால்..உடனே ஒரு வெகுமதி..

எல்லாரும் திட்டுவாரு அடிப்பாரு என்று சொல்வார்கள்…
ஆனால் அதற்கு பின்னால் கண்டிப்பாக உதவி இயக்குனரின் மாபெரும் தவறு இருக்கும்…

ஆறு மாதம் கழித்து கூட ஒரு டயலாக்கை காப்பி ரைட்டிங்கில் விட்டிருந்தால்…
ஒரு ஷாட் எடிட்டிங்கில் விடுபட்டிருந்தால் கண்டுபிடிக்கும் நினைவாற்றல் உள்ளவர்..

முப்பது வருடங்களாக இன்னமும் இன்றைய இயக்குநர்களுக்கு  ஈடு 
கொடுத்து கொண்டிருக்கும் 
KSR என்ற எங்கள் இயக்குநர்…

சாப்பிட்டியாடா என்ற வார்த்தையின் 
அன்பை கூட அதட்டலாய் தான் சொல்லத் தெரிந்த எங்கள் அன்பு இயக்குனருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!! ❤

Happy Birthday Sir..!!!
MY GURU# KS Ravikumar Sir

மாவட்ட செய்திகள்

Most Popular

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளின்...

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை சேந்தவர் பேக்கரி உரிமையாளர் சக்கரபாணி. இவர் கர்நாடக...
Do NOT follow this link or you will be banned from the site!