Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!

உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!

நிறைய தண்ணீர் குடியுங்கள்.அதிக தாகமாக இருக்கிறது என்பதற்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை ஒரு போதும் குடிச்சிறாதீங்க

உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!

தேர்தல் ஆணையமே பகல் நேரத்தில் பிரசாரம் செய்யக்கூடாது,மக்கள் கூடும் இடங்களில் போதிய அளவு தெண்ணீர் இருக்க வேண்டியது கட்டாயம்,என்று ஏகப்பட்ட கண்டிசனைப் போட்டிருக்கே எதுக்குன்னு தெரியுமா?
 
வழக்கத்தைவிட வெய்யில் அதிகமா இருக்கிறதுதான் காரணம். ஆணையத்தின் கட்டுப்பாட்டை எத்தனை கட்சிகள் கடைப்பிடிக்கும் என்று தெரியாது! மெனக்கிட்டு எல்லாத்தையும் பார்த்து ‘பார்த்து’ செஞ்சாலும் எல்லாம் எலெக்சன் ரிசல்ட் வர்ற வரைக்கும்தான். அதுக்கப்புறம் நம்மளை நாமளே பார்த்திக்கிட்டாதான் உண்டு.

பகலில் வெளியே செல்ல வேண்டாம் 
 

பிற்பகல் 12 முதல் 3 மணிவரை வெளியில் பயணிப்பதை தவிருங்கள். அவசியம் போயே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே போக வேண்டும்.அப்படி போகிறவர்கள் மெல்லிய வெள்ளைத் துணியை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் கெல்மெட் போடுங்கள்.பொதுவாகவே பெண்கள் டூ வீலரில் போகும்போது தலையையும் முகத்தையும் மறைத்துக்கொண்டு போவதைப் பார்த்திருப்பீர்கள்.அதே போல்தான் ஆண்களும் கட்டிக்கொண்டு போங்கள்.குளிர் கண்ணாடி கட்டாயம் அணியுங்கள்.இது மாதிரி செய்வதால் உடலுக்குள் வெப்பம் பரவுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும்.

summer

திரவ ஆகாரம் முக்கியம் 
 

நிறைய தண்ணீர் குடியுங்கள்.அதிக தாகமாக இருக்கிறது என்பதற்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை ஒரு போதும் குடிச்சிறாதீங்க. ஜில்லென்று குடிக்கும் போது இதமாகத்தான் இருக்கும்.அதால் ஒரு போதும் உடல் சூட்டை சமன் படுத்த முடியாது.
 
அப்போ,கூல்ட்ரிங்ஸ் கடைகளில் விற்கப்படும் ஜூஸ் சாப்பிடலாமா என்றால், அதிலும் ஆபத்து இருக்கிறது!ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை தொடங்கி எல்லா ஜூஸ்களிலும் பெரும்பாலும் சுவைக்காக,காய்ச்சிய பாலும்,ஒரு நாளைக்கு ஒரு ஜாயிண்ட் ஃபாமிலிக்கு தேவைப்படும் சர்க்கரைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஒரு ஜூஸில் சேர்க்கிறார்கள்.அதை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடுதான் விளையும்.முடிந்தால் எதுவுமே சேர்க்காமல் பிளைன் ஜூஸ் சாப்பிடுங்கள்.  

ஸ்பெஷல் மோர் 
 

இது,எல்லாவற்றையும் விட சிறப்பானது மோர்.அதிலும் இந்த வகையான  ஸ்பெஷல் மோரை நீங்களே செய்து குடிக்கலாம்.ஒரு லிட்டர் மோர் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.பெரிய பச்சை மிளகாய் இரண்டு, ஓர் மீடியமான வெள்ளரிக்காயில் பாதி அளவு,புதினா, கரி வேப்பிலை கொஞ்சம், தோல் நீக்கிய ஒரு துண்டு இஞ்சி எல்லாத்தையும் மிக்சி ஜாரில் போடுங்கள்.அதோடு ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும், நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் பெருங்காயம் கொஞ்சமும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுத்து மிக்சியில் போட்டு பேஸ்ட்டு பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

நீர் மோர்

இப்போது ஒரு லிட்டர் மோருக்கு தேவையான தயிரை இதோடு சேர்த்து மீண்டும் மிக்சியை ஒரு சூத்து சுத்தவிடுங்கள்.கடுகு,உழுந்தை மட்டும் எண்ணையில் தாளித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு நாள் முழுக்க ஒரு நபர் இதைக் குடித்தால் போதும் உடலுக்கு வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
 
ஜில்லென்று குடிக்க ஆசைப்பட்டால் ஐஸ் சேர்க்காதீர்கள்.பாட்டலில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து ஜில்லானதும் குடியுங்கள்.வெளியில் போகும்போது இதை எடுத்துப் போவதாக இருந்தால்,24 மணி நேரத்திற்கு குளிச்சியாகவும், ஹாட்டாகவும் வைத்திருக்கக் கூடிய பாட்டில் கன்டெய்னர்கள் கடைகளில் கிடைக்கிறது.அதை வாங்கி,அதில் கொண்டு போங்கள்.நார்மலாக தண்ணீர் கொண்டு போகும் பாட்டில்கள் தாங்காது.அடிக்கிற வெயிலுக்கு சீக்கிரம் புளித்துவிடும்.
 
இப்போ டைட்டிலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.என்ஜாய்…

இதையும் படிங்க :

வெய்யில் காலத்தில் காரில் பயணிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் !

உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் உரிமை...

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

தனது கணவன் திடீரென்று கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவன் உயிர் இழந்து விடுவார் என்பதை உறுதி செய்து கொண்ட மனைவி,...

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து...

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர்...
- Advertisment -
TopTamilNews