Home சினிமா உச்ச நடிகர்களிடம் இல்லாத சூர்யாவின் பண்பு!

உச்ச நடிகர்களிடம் இல்லாத சூர்யாவின் பண்பு!

வெளியே வேலைகளில் இருக்கும் எரிச்சலை எல்லோரும் வீட்டில் காட்டுவார்கள். ஆனால் சூர்யா இதில் ஸ்பெஷல்.

1997-ம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ என்ற படத்தில் இயக்குநர் வசந்த் அறிமுகத்தில் சரவணனாக இருந்த சூர்யா வெளிபட்டார். ‘நேருக்கு நேர்’ படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் மதிய உணவிற்கான இடைவெளி விடும் நேரம். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் எல்லாரும் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

 actor suriya

அடுத்த காட்சிக்காக யோசித்தப்படி சூர்யாவைக் கடந்துச் சென்ற இயக்குநர் வசந்த் கன்களில் அந்த காட்சி பட்டது. முழு மூச்சாக பிரியாணியை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவிடம், ‘என்ன பிரியாணியா?’ என்று கேட்கிறார் வசந்த். ‘ஆமா சார்.. சூப்பரா இருக்கு.. நீங்க சாப்பிடலைய?’ என்று வெள்ளந்தித்தனத்தோடு சூர்யா கேட்க, ‘நீ நல்லா சாப்பிடுப்பா… படம் நல்லா வரணும்னு எனக்கு மட்டும் தானே அக்கறை இருக்கணும். நல்லா நடிக்கிறோமா இல்லையான்னு உனக்கெதுக்கு கவலை. நீ பிரியாணியை நல்லா சாப்பிடுப்பா’ என்று சொல்லியபடி நகர்ந்து சென்றார் வசந்த். தமிழ் சினிமாவில், சூர்யா மேல் விழுந்த முதல் அடி அது தான். நடிக்க வரவில்லை, நடனம் தெரியவில்லை என்று கேட்கும்படியே சூர்யாவைச் சுற்றி எல்லோரும் பேசினார்கள். வாரிசு நடிகர்கள் காணாமல் போய் கொண்டிருந்த காலகட்டம் அது. வேறு எந்தவொரு நடிகராக இருந்தாலும், சந்தித்த அவமானங்களால், கேட்ட வஞ்சப்புகழ்ச்சி பாராட்டுகளால், கூட இருந்தே பள்ளம் பறிக்கும் கூடா நட்பால் திரையுலகை விட்டு எப்போதோ காணாமல் போயிருப்பார்கள். 

 actor suriya

ஆனால் சூர்யாவின் எழுச்சி வேறு ரகம். இன்று தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மற்ற நடிகர்கள் அனைவரிடமுமே இல்லாத சில தனிப்பட்ட பண்புகள் சூர்யாவிடம் இருக்கிறது. அந்த அடிப்படை பண்புகள் மட்டும் தான் சூர்யாவை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. 
சிவகுமாரின் மூத்த மகன் என்கிற காஸ்ட்லி விசிட்டிங் கார்டு, சூர்யாவிற்கு முள் கிரீடமாக தான் சினிமாவில் இருந்தது. ஆனால், அந்த முள் கிரீடம் தான் கூடா நட்புகளை விலக்கி வைத்தது. இவ்வளவு உயரத்திற்கு வந்தும், சூர்யாவின் பிம்பம் சாய்ந்து விழாமல் இருப்பதற்கு சிவக்குமார் கற்றுக் கொடுத்த ஒழுக்கமும், நேர்மையும் அஸ்திவரமாய் இருப்பது தான் முக்கிய காரணம். 

 actor suriya

தன்னிடம் இருக்கும் குறைகளை, ஒவ்வொன்றாக உள்ளுக்குள் உற்று பார்த்து சரி செய்ய ஆரம்பித்தார் சூர்யா. அதீத கோபங்களை காலப்போக்கில், தனது வெற்றிக்கான அச்சாரமாக, உரமாக மாற்றிக் கொள்கிற பக்குவத்தையும் காலம் சூர்யாவிற்கு கற்றுக் கொடுத்திருந்தது. அது அவரது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது.வளர்ந்த பின், இன்று முன்னணியில் இருக்கும் நான்கைந்து படங்களில் நடித்த நடிகர்களைக் கூட சினிமாவில் இருப்பவர்களே தொடர்பு கொள்ள முடியாது. அவர்களைச் சுற்றி எப்போதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வளையம் இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால், சூர்யா அப்படி கிடையாது. இன்றும், தான் நடித்த, தன்னுடன் நடிக்க அத்தனைப் பேருடனும் சூர்யா ரீச்சப்பிள் தான். 
எத்தனை பெரிய ஹிட் கொடுத்தாலும், பிற நடிகர்களைப் போல கர்வம் சூர்யாவிடம் எட்டிப் பார்த்ததில்லை. அந்த வெற்றியை தலைக்கேற்றாமல், அடுத்தப் படத்துக்கான உழைப்பை வெளிப்படுத்த ஆரம்பிக்கிற பண்பு சூர்யாவின் ஸ்பெஷல்.

 actor suriya

எத்தனைப் பெரிய விழாவாக இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டமான இடமாக இருந்தாலும் சரி, நீங்கள் சூர்யாவின் குட்புக்கில் இடம் பிடித்திருந்தால், கொஞ்சமும் ஈகோ பார்க்காமல், தானே முன் வந்து ஒரு புன்னகை சிந்தி, கைகுலுக்குவார். இந்த எளிமை முதல் படத்திலிருந்து இன்று வரையில் சூர்யாவிடம் தொடர்கிறது.சூர்யாவிடம் குறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எல்லோரையும் போல அவருக்கும் குறைகளைக் கேட்கும் போது கோபம் வரும். ஆனால், அடுத்த முறை சூர்யாவைப் பார்க்கும் போது அந்த குறை அவரிடம் இருந்து காணாமல் போயிருக்கும். குறை சொன்னவர்கள் அதை மறந்தே போயிருப்பார்கள். அன்று இரவு அவர் தூங்கியிருக்க மாட்டார். முதல் வேலையாக அந்த குறையை எப்படி சரிசெய்வது என்று அதற்கான முயற்சிகளில் நள்ளிரவு நேரத்திலும் ஈடுபட்டிருப்பார். அந்த விடாமுயற்சியும், அசுரத்தனமான உழைப்பும் சூர்யாவின் ஸ்பெஷல்.

suriya

வெளியே வேலைகளில் இருக்கும் எரிச்சலை எல்லோரும் வீட்டில் காட்டுவார்கள். ஆனால் சூர்யா இதில் ஸ்பெஷல். வெளியில் தான் நடிகர் சூர்யா. வீட்டில், அன்பைப் பொழியும் கணவர், குழந்தைகளுக்கு பாசமான அப்பா, தந்தைக்கு கடமையாற்றும் மகன், தம்பிக்கு தோள் தட்டி பாராட்டும் சகோதரன், தங்கைக்கு இன்னமும் செல்லம் கொடுக்கும் அண்ணன் என்று குடும்ப வாழ்க்கையை கச்சிதமாய் வகுத்து வாழ்ந்து வரும் வெகு சில நடிகர்களில் சூர்யா முதன்மையானவர். 
பிரபல நடிகருக்கு வாழ்த்துக்கள் என்பதை விட, சக நேர்மையான மனுஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் டாப் தமிழ் நியூஸ் பெருமைக் கொள்கிறது. 
பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா!

Most Popular

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,457 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கள்...

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி....

எஸ்பிபியை கவுரவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். 50...
Do NOT follow this link or you will be banned from the site!