Home அரசியல் ‘உங்க அம்மா தான வளத்துச்சு!’ - டிடிவி தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்!

‘உங்க அம்மா தான வளத்துச்சு!’ – டிடிவி தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்!

டெல்டா பகுதிகளைப் பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், பெண் ஒருவர் கோபமாக பேசும் காட்சி சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: டெல்டா பகுதிகளைப் பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், பெண் ஒருவர் கோபமாக பேசும் காட்சி சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்டா மாவட்ட மக்களுக்கு முறையான நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை என டெல்டா வாசிகள் குற்றம் சாட்டுவது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு பார்வையிட செல்லும் அமைச்சர்களை, டெல்டா மக்கள் நடத்தும் விதத்திலிருந்தே தமிழக அரசு மீது அவர்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். 

குறிப்பாக, சொந்த மாவட்ட அமைச்சர்கள் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், “உங்க அம்மா தான வளத்துச்சு.. இப்ப பாருங்க.. இனி மந்திரி ஆக முடியாது” என கோபத்துடன் கூறுகிறார். அதற்கு, “இனி அரசியலில் கூட இருக்க முடியாது” என டிடிவி பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோ சமுகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா!

ஆளும் கட்சியினரின் சட்டவிரோத முறைகேடுகள் மற்றும் ஆட்சியை கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். ஆனால்...

வரும் 15 முதல் 26ம் தேதி வரை முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு- அண்ணா பல்கலை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, ஜன.19ம் தேதி முதல்...

சிறுமலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...

லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் வன்கொடுமையாகுமா? பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உத்திர பிரதேசத்தை சேர்ந்த வினய் பிரதாப் சிங் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக வினய் பிரதாப்...
TopTamilNews