‘உங்கிட்ட தனியா வந்து சொல்ல இஷ்டம் இல்ல’: சாக்ஷியிடம் ஆட்டிட்யூட் காண்பித்த லாஸ்லியா! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மீரா மிதுன் வெளியேறிய பின்னர் போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர். இருப்பினும் கவின், சாக்சி இடையே உள்ள காதல் சண்டை மட்டும் அடிக்கடி பூகம்பம் போல் வெடிக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே உள்ள உறவு விரிசல் அடைந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து இன்றைக்கு மொட்ட கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மனதில் இருக்கும் கேள்வியை எழுதி பாக்ஸில், பெயர் எழுதாமல் போட வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். 

அதில் முதல் ஆளாக சென்ற லாஸ்லியா, ‘எனக்கும் கவினுக்கும் இடையே இருக்கும் பிரின்ட் ஷிப் குறித்து எங்களுக்கு தெரியும். அதை நான் ஒரு ஒருத்தவங்களா கூப்பிட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ என்றார். 

அதற்குள் இடையில் சாக்ஷி பேசியதால் கடுப்பான லாஸ்லியா, ‘நான் உங்களக்கு சொல்லல, உங்ககிட்ட வந்து எனக்கு தானிய சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. அதுனால சொல்ல’ என்று மிகவும் ஆட்டிட்யூட்டாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். இதை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் வழக்கம் போல் எதுவும் பேசாமல் வாய்யை மூடிக்கொண்டு அமர்ந்துள்ளனர். 
 

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...