‘உங்கள் வீட்டு கழிவறையைச் சுத்தம் செய்ய நான் எம்பி ஆகவில்லை’: தொண்டரிடம் எகிறிய பாஜக எம்பி!

மத்திய பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக வெற்றி பெற்றவர்  பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர்.

போபால் : உங்கள் வீட்டு கழிவறையைச் சுத்தம் செய்ய நான்  எம்பி ஆகவில்லை  என்று பேசிய பிரக்யா சிங் தாக்கூர் பேச்சிற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Pragya Singh Thakur

மத்திய பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக வெற்றி பெற்றவர்  பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர். சர்ச்சைக்குப் பெயர் போன இவரிடம்  பாஜக தொண்டர் ஒருவர், செஹோர் பகுதி சுகாதாரமற்று இருக்கிறது என்று புகார் தெரிவித்தார். அதற்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரக்யா தாக்கூர், உங்கள் வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய நான்  எம்பி ஆகவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு எம்.பி-யாக, உள்ளூர் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் மேம்பாட்டுக்காகப் பணி வேண்டும்’ என்றார்.

nadda

இந்நிலையில்  இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட பிரக்யா தாக்கூரை பாஜக செயல் தலைவர் நட்டா கண்டித்ததாகத் தெரிகிறது. மேலும் இனிவரும் காலங்களில்  கட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையிலான பேச்சுக்களைத் தவிர்க்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Most Popular

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...